Latest Videos

வெயிலால் அனல் காற்று: ஆந்திராவில் ஒரே நாளில் 293 பேர் பலி



ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது.

நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள்.

அதிக எண்ணிக்கையாக கிருஷ்ணா மாவட்டத்தில் 33 பேரும், பிரகாசம் மாவட்டத்தில் 32 பேரும், கரீம் நகரில் 29 பேரும், நல்கொண்டாவில் 27 பேரும், குண்டூரில் 26 பேரும், விசாகப்பட்டினத்தில் 16 பேரும், கம்மம் மாவட்டத்தில் 23 பேரும், வரங்கலில் 20 பேரும் பலியாகி உள்ளனர். இது தவிர கிழக்கு கோதாவரியில் 17 பேரும், மேற்கு கோதாவரியில் 11 பேரும் பலியாகி உள்ளனர்.

ஏராளமானோர் சன்ஸ் டோக் வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். வாட்டி வதைக்கும் வெயிலில் மனிதர்களே பலியாகும் நிலையில் வன உயிரினங்கள், கால்நடைகள் நிலைமை பரிதாபமாக உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 6 1/2 வயது கர்ப்பிணி வெள்ளைப்புலி பரிதாபமாக இறந்தது. அந்த புலி கருவுற்று இருந்ததால் அதனை குளுமையான இடத்தில் வைத்து பூங்கா ஊழியர்கள் பராரித்து வந்தனர்.

ஆனாலும் அந்த புலி பரிதாபமாக இறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உள்ள குட்டிகளை காப்பாற்ற கால்நடை டாக்டர்கள் முயன்றும் முடியாமல் போனது.

புலியின் வயிற்றில் இருந்த 4 குட்டிகளும் இறந்து போனது. வெயில் கொடுமைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் நேற்று வரை84 பேர் வெயில் கொடுமைக்கு பலியாகி இருப்பதாக பிரேத பரிசோதனை மூலம் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேர் பலியானதாக வருவாய் துறை மந்திரி ரகுவீர ரெட்டி அறிவித்து உள்ளார்.

அனல் காற்றுடன் வெப்ப நிலை இன்னும் 1 வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதால் பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதற்கு ஏற்றார்போல் நிலக்கரி சுரங்கம், மின் துறை மற்றும் ஊரக வேலை வாய்ப்பு தொழிலாளர்களின் மணி நேரங்கள் மாற்றி அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

800 வது எபிசோடை நோக்கி நாதஸ்வரம் … திடீர் திருப்பங்கள்



சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் 800 வது எபிசோடை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாக்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.

காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டு வரும் நாதஸ்வரம் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் பரபரப்பான திருப்பங்களை நோக்கி நகர்கிறது நாதஸ்வரம் தொடர்.

காது குத்து விழா கலாட்டா கோபியின் தங்கை மகேஷ் மகன் காது குத்து விழாவை அண்ணி மலரை அவமானப்படுத்துகிறாள் மகேஷ். இதற்கு மலரின் தாய் மாமன் வந்து சத்தம் போட்டுவிட்டுப் போகிறான்.

வாழ விடமாட்டேன் இதனால் கோபப்படும் மலரின் மாமியார், இனி அவளை வீட்டில் வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொல்லிவிட்டுப் போகிறாள்.

அதிரடி திருப்பம் மலேசியாவில் கோபி குடும்பத்துக்கு அறிமுகமான பிரசாத், வேலைக்காக காரைக்குடி வருகிறான். அவன் வருகையைத் தொடர்ந்து கதையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் கதையை இன்னொரு விறுவிறுப்புக் கோணத்தில் கொண்டு போகிறது.

காணாமல் போன மகன் பிரசாத்தின் வருகையினால் ஏற்படும் பல கேள்விகள் தவிர்க்க முடியாதவை. அவன் யார்? காரைக்குடியில் காணாமல் போன சொக்கலிங்கத்தின் மூத்த மகனா? அல்லது மகாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறவனா? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது.

கோபி - பிரசாத் பிரசாத் இங்கே வந்து விட்டதால் அவனது பெற்றோரின் தற்போதைய நிலை என்ன? ஒருவேளை பிரசாத், சொக்குவின் வீட்டு வாரிசு என்பது உறுதிப்பட்டால் அதுவரை அவனை வளர்த்து உருவாக்கிய பெற்றோர் விட்டுக் கொடுப்பார்களா? கோபி-பிரசாத் நட்பு நீடிக்குமா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்

மனம் மாறிய நீலாவதி இது ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, இங்கே நீலாவதி மனம் மாறி காமுவின் வளைகாப்பை சிறப்பாக நடத்தியிருக்கிறாள். அதோடு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் இருக்கிறாள்.

காணாமல் போன பரமு-ரமேஷ் திரும்பக் கிடைப்பார்களா? என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

பிரசவம் நடக்கணுமே காமு, பரமு பிரசவம் நல்லமுறையில் நடைபெறுமா? மகா, பிரசாத்தை ஏற்றுக் கொள்வாளா? மயில், தெய்வானை, மீனாட்சி மகேசுடன் இணைவார்களா? என்ற கேள்விகளுக்கும் இனிவரும் வாரங்களில் விடை காணலாம்

ரோகினியின் திருமணம்
ரோகிணியின் தாய் மாமன் மகன் திருமணம் தடையின்றி நடைபெறுமா? ரோகிணியின் திருமணத்தால் ஒதுங்கிச் சென்ற ராஜேஷ் மீண்டும் வருவானா? ராகினியின் வாழ்வில் அடுத்த கட்டம் என்ன? பிரசாத் வருகையால் கோபி-மலர் உறவில் விரிசல் ஏற்படுமா? போன்ற பல பரபரப்புக் கேள்விகளுக்கும் விடை சொல்லும் என்கிறார், தொடரின்இயக்குனரும் தயாரிப்பாளருமான திருமுருகன்.

டிராவிட்டுக்கு "அவுட்' கொடுத்த அசாத்



புதுடில்லி: பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சர்ச்சைக்குரிய அம்பயர் அசாத் ராப். ஐந்தாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது, மும்பையை சேர்ந்த "மாடல்' அழகி லீனா கபூர், இவர் மீது செக்ஸ் புகார் கொடுத்தார். இதற்கான ஆதாரமாக போட்டோக்களை வெளியிட்ட அவர், பின் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இப்போது கிளம்பியுள்ள சூதாட்ட சர்ச்சையில் அசாத் ராப் சிக்கியுள்ளார். இதனால், வரும் ஜூன் 6ல் இங்கிலாந்தில் துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அம்பயர் பட்டியலில் இருந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக நீக்கியது.

இந்த ஆறாவது தொடரில் அசாத் ராப், 14 லீக் போட்டிகளில் அம்பயராக இருந்தார். இதில் மும்பையில் பங்கேற்ற இரு போட்டிகளில், அசாத் ராப் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* கடந்த ஏப்., 29 ம்தேதி மும்பைக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. குல்கர்னி வீசிய முதல்பந்து அளவுக்கு அதிகமான உயரத்தில் சென்றதால், அம்பயராக இருந்த அசாத் ராப், "நோ-பால்' கொடுத்து எச்சரித்தார்.

அடுத்த பந்தையும் இதேபோல குல்கர்னி வீசிய போதும், "நோ-பால்' தரவில்லை. இப்போட்டியில் மும்பை 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

* மே 15ல் மும்பை இலக்கை (166/8) விரட்டியது ராஜஸ்தான் அணி. கேப்டன் டிராவிட் 4 ரன்கள் எடுத்த போது, ஜான்சன் பந்தை எதிர்கொண்டார். சற்று "பவுன்சராக' வந்த இதை விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட்டார் டிராவிட். ஆனால், அசாத் ராப் "கேட்ச்' என, தீர்ப்பு கொடுத்து அதிர்ச்சி தந்தார். இதில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு



புதுடில்லி: "பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் பிடிபட்டனர். இதன் பின் இவ்விவகாரத்தில் தினமும் ஒரு புதுத்தகவல் வெளியாகிறது.

இதுவரை மொத்தம் 21க்கும் மேற்பட்டோர் டில்லி டில்லி போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' குறித்து தனியாக விசாரித்து வரும் மும்பை போலீசில், மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா சிக்கினார்.

இவர் கொடுத்த தகவலின் பேரில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' செய்த மூன்று சென்னை வீரர்கள் குறித்து வின்டூ, போலீசிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் இணைக்கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில்<"" சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சென்னை வீரர்களின் பெயரை, வின்டூ எங்களிடம் தெரிவித்தது உண்மை தான். இதில் ஒரு முன்னணி "சீனியர்' வீரரும் உள்ளார். இதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இது யார் யார் என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது,'' என்றார்.

பிரான்சில் நடந்த "கேன்ஸ்" பட விழாவில் ரூ.5 1/2 கோடி நகைகள் கொள்ளை



பிரான்சில் புகழ் பெற்ற "கேன்ஸ்" படவிழா நடந்தது. ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு விருது பெறும் நடிகைகள் அணிவதற்காக ஒரு தனியார் நிறவனம் தங்க நகைகளை இரவல் ஆக வழங்கி இருந்தது. அந்த நகைகள் விழா நடந்த ஒரு ஓட்டல் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வைத்திருந்த தங்க நகைகள் திடீரென காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.5 1/2 கோடி.

ஆனால் பால்ம் "டி" மோர் கோப்பை மட்டும் பாதுகாப்பாக இருந்தது. அதை கொள்ளையர்கள் எடுத்து செல்லவில்லை.

கடந்த ஆண்டு நடந்த "கேன்ஸ்" பட விழாவில் கால்பந்து வீரர்களின் ரூ.3 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் போட்டிகளை தடை செய்யக் கோரி ரசிகர்கள் ஆர்பாட்டம் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களை கண்டித்து ரசிகர்கள் போராட்டம்



புதுடெல்லி: சூதாட்ட புகாரில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 10 இடை தரகர்களை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

நடப்பு ஐ.பி.ல் பொடியில் ஸ்ரீசாந்த் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 11 இடை தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 10 இடை தரகர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிரிக்கெட் வீரர்களுக்கு எராளமான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை தரகர்கள் அவர்களின் வலையில் விழவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே சூதாட்டதில் ஈடுபட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கர்நாடக, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்களில் ஆவேச போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஐ.பி.ல் சூதாட்டங்களை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்த போவதாக திராவிட கழகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் ஐ.பி.ல் போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

இதனிடையே சூதாட்டபுகாரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் இடை தரகர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி என அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவில் பணி புரிந்து வந்த சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோரை அந்நிறுவனம் இடை நீக்கம் செய்துள்ளது.

சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் நடப்பு ஐ.பி.ல் போட்டிகளில் 15 போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவதுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் ஆர்பாட்டம்

ஐ.பி.எல் போட்டிகளை தடை செய்யக் கோரி நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சூதாட்ட புகாரில் சிக்கி கைதாகியுள்ள மூன்று ஐ.பி.எல் வீரர்களின் புகைப்படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர்.

ஐபிஎல் போட்டிகள் சூதாட்டத்தை ஊக்குவிப்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்று ரசிகர்கள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

ஸ்ரீசாந்த் உள்பட 14 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்



டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சண்டிலா உள்ளிட்ட 14 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக இந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் வீரர்கள் மற்றவர்கள் புக்கிகள் ஆவர். அனைவரும நேற்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 நாள் போலீஸ் காவல் கோரி காவல்துறை தரப்பில் மனு செய்யப்பட்டது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பெரும் நெட்வொர்க்காக செயல்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மேலும் பல தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. எனவே 7 நாள் காவல் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இருப்பினும் 5 நாள் காவலை நீதிபதி லோகேஷ் குமார் சர்மா அனுமதித்து உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடி, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியிடம் ஸ்ரீசாந்த்தின் வக்கீல் கூறுகையில், எனது கட்சிக்காரருக்கு போலீஸ் காவலில் பாதுகாப்பு குறித்து சந்தேகமாக உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, போலீஸ் காவலில் உங்களது கட்சிக்காரருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் வேறு எங்குமே அவருக்கு பாதுகாப்பு இருக்காது.

அவருக்கு என்ன இசட் பிளஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறுகிறீர்களா என்று திருப்பிக் கேட்டார். மே 21ம் தேதி வரை ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவர்.

மன அழுத்தத்தை அதிகரிக்கும் 10 கெட்ட பழக்கங்கள்



பெரும்பாலும் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அதிலும் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கும் என்று நினைத்து செய்யும் பழக்கவழக்கங்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தை தூண்டிவிடுகின்றன. உதாரணமாக, தொலைக்காட்சி பார்த்தால், மன அழுத்தம் குறையும் என்று மனதை ரிலாக்ஸ் செய்ய டிவியைப் பார்ப்போம்.

ஆனால் உண்மையில் அவை தான், மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. அதிலும் இன்றைய அவசர உலகில் அனைத்தும் அவசரமாக நடப்பதால், வாழ்க்கையே ஒருவித அவசரத்தில் ஓடுகிறது.

இதனால் மன அழுத்தம் மட்டுமின்றி, வேறு பல உடல்நல பிரச்சனைகளும் உண்டாகின்றன. எனவே மனதை அழுத்தமின்றி வைப்பதற்கு, ரிலாக்ஸ் செய்ய மேற்கொள்ளும் தவறான செயல்களை மேற்கொள்ளாமல் இருப்பதே, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகும்.

இப்போது மன அழுத்தம் குறையும் என்று நினைத்து செய்யும் தவறான பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்த்து, அவற்றை தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைப்போம்.

தாமதமாக எழுவது மன அழுத்தத்தை உருவாக்குவதில் முதன்மையானது காலையில் தாமதமாக எழுவது தான். எப்படியெனில், காலையில் தாமதமாக எழுவதால், வேலைக்கு நேரமாகிவிட்டது என்று அவசர அவசரமாக காலை உணவை சாப்பிடாமல் கூட கிளம்பிவிடுகிறோம்.

இதனால் அன்றைய நாள் ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கும். அதையே தினமும் தொடர்ந்து பின்பற்றினால், மன அழுத்தம் அதிகரித்து, வேறு சில உடல் பிரச்சனைகளும் ஏற்படும்.

டிவி பார்ப்பது பெரும்பாலான மக்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கு, டிவியைப் பார்ப்பார்கள். ஆனால் அவ்வாறு டிவி பார்ப்பது, உண்மையில் மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்கும். எனவே மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு டிவியைப் பார்க்காமல், அதற்கு பதிலாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

புகைப்பிடித்தல் புகைப்பிடிப்பவர்கள், ஏதேனும் டென்சன் என்றால் உடனே அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் புகைப்பிடித்தால், மன அழுத்தம் குறையாது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் பொதுவாக டென்சனாக இருக்கும் போது இதயத் துடிப்பின் அளவானது அதிகமாக இருக்கும். இந்த நேரம் புகைப்பிடித்தால், இது தற்காலிகமாக சிலருக்கு அமைதியைக் கொடுத்தாலும், உண்மையில் அது மனதை அழுத்தம் அடையச் செய்து, வேறு சில தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும்.

வேலையில் அதிக ஆர்வம் செய்யும் வேலையை விரும்பி செய்தால், நிச்சயம் அது நல்லது தான். இருப்பினும் வேலை பிடிக்கும் என்பதற்காக, எப்போதுமே அலுவலகத்தில் இருந்தால், அது மனதை எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே வைத்திருக்கும்.

அது வெளிப்படையாக தெரியாது. ஆனால் சில சமயங்களில் அந்த அழுத்தமானது மனதிற்குள்ளேயே அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்திவிடும். எனவே வேலையை விட, உடல் நலம் முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

முறையற்ற உணவுப்பழக்கம் இன்றைய உலகில் அனைவருமே பிஸியாக இருப்போம். அதனால் போதிய இடைவெளியில் உணவுகளை சாப்பிடாமல் இருப்போம். மேலும் அப்போது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவோம்.

இவ்வாறு சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால், அது உடல் எடையை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

நிதானமின்றி கோபத்தை வெளிப்படுத்துதல் அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளு என்பதால், அங்குள்ளோரின் மீதுள்ள கோபத்தை வீட்டில் உள்ள மனைவியிடம் வெளிப்படுத்துவதால், கோபம் குறையுமா என்ன? உண்மையில் இல்லை அல்லவா!

எனவே ஏதேனும் கோபம் என்றால், முதலில் அதனை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மற்றவரிடம் வெளிப்படுத்துவதற்கு பதிலாக, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்து குறைக்க வேண்டும்.

குருட்டுத்தனமாக சாப்பிடுதல் நிறைய மக்கள் மன அழுத்தம் அல்லது டென்சன் என்றால் அதனை கட்டுப்படுத்துவதற்கு, டெசர்ட் அல்லது வறுத்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவார்கள்.

ஆனால் அந்த ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால், உண்மையில் மன அழுத்தமானது குறையாது. அது உடல் எடையை அதிகரிப்பதோடு, இன்னும் மன அழுத்தத்தை அப்படியே தான் வைத்திருக்கும்.

போதிய உடற்பயிற்சி இல்லாமை மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சிறந்த வழியென்றால் அது உடற்பயிற்சி தான். அத்தகைய உடற்பயிற்சி இல்லாவிட்டால், மன அழுத்தம் குறையாமல், இன்னும் தான் அதிகரிக்கும்.

எனவே தினமும் காலையில் சிறிது நேரம் லேசான உடற்பயிற்சி, ஜாக்கிங், வாக்கிங் அல்லது ரன்னிங் போன்றவற்றை மேற்கொண்டால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, மன அழுத்தமும் குறையும்.

அழகைப் பராமரிக்காமல் இருப்பது அதிகமான வேலைப்பளுவினால், சிலருக்கு அழகைப் பராமரிக்க நேரமின்றி போகிறது.

இதனால் வெளியே செல்லும் போது, மற்றவரை பார்க்கும் போது நாம் அழகாக இல்லை என்ற எண்ணத்திலேயே மனதில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது நேரம் ஒதுக்கி அழகை பராமரித்து வந்தால், எதற்கு கவலைப்பட வேண்டாம்.

போதிய தூக்கமில்லாமை ஒருவருக்கு 7 மணிநேர தூக்கமானது மிகவும் இன்றியமையாதது. ஆனால் நிறைய மக்கள் குறைந்த நேரம் மட்டும் தூங்குவதால், அது மனதில் எரிச்சலை உண்டாக்கி, தலைவலி மற்றும் சோர்வை ஏற்படுத்தி, இறுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே நல்ல தூக்கத்தை மேற்கொள்வதும், மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழியாகும்.


எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார் குத்து ரம்யா



தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தில் நடித்தவர் கன்னடத்து நடிகை ரம்யா.

அதையடுத்து பொல்லாதவன், கிரி, சிங்கம்புலி உள்பட சில படங்களில் நடித்தவர் பின்னர் கன்னடத்தில் முக்கிய நடிகையாகி விட்டார்.

அதோடு, காங்கிரஸ் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்ட ரம்யா, இளைஞர் காங்கிரசிலும் சிலகாலம் பதவி வகித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக ஓட்டு சேகரித்தாராம் ரம்யா.

அதையடுத்து காங்கிரசும் கர்நாடகத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டதால், ரம்யாவுக்கும் ரொம்ப நல்ல பெயர் கிடைத்துள்ளதாம்.

அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரும் எம்.பி தேர்தலில் சீட் கேட்க முடிவு செய்திருக்கிறாராம் ரம்யா. அவருக்கு கர்நாடக காங்கிரசில் நல்ல செல்வாக்கு இருப்பதால் எம்.பி சீட் உறுதியாக கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

ஈரானில் கடும் நிலநடுக்கம்: 70 கிராமங்கள் சேதம்



டெஹ்ரான்: ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது.

ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப்பகுதிகளில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த மாதம் ஈரானில் 7.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரூ 2 கோடி மோசடி: பவர் ஸ்டார் மீது 6 வது வழக்கு..!



சென்னை: கடன் வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 6வது மோசடி வழக்கு இது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வடபழனி வெங்கீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ரா.மணியம் (60). இவர் மலேசியாவில் வாகன உதிரி பாகங்கள் தொழில் செய்து வருகிறார். மணியத்துக்கு தொழிலுக்கு ரூ. 100 கோடி பணம் தேவைப்பட்டதாம்.

இதையறிந்த பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ. 100 கோடி கடன் வாங்கித் தருவதாக தெரிவித்தாராம். ஆனால் அதற்கு தனக்கு கமிஷனாக ரூ.2.50 கோடி தர வேண்டும் என்று சீனிவாசன் தெரிவித்தாராம். அதை நம்பிய மணியம், சீனிவாசனிடம் ரூ.2.50 கோடி கொடுத்ததாகத் தெரிகிறது.

பணத்தை பெற்றுக் கொண்ட சீனிவாசன், அதன் பின்னர் கடன் வாங்கிக் கொடுக்கவில்லையாம். இதனால் மணியம், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாராம். ஆனால் சீனிவாசன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவரை சீனிவாசன் மிரட்டினாராம். இது குறித்து மணியம், சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் சீனிவாசன் மீது புதிதாக ஒரு மோசடி வழக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்.

சீனிவாசன் மீது இதுவரை 5 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பே சீனிவாசன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் மோசடி புகார்கள் தினமும் சென்னை காவல்துறைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்குரிய நடவடிக்கையில் காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. -இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரூ.200 பென்ஷன் பெற நாள் முழுவதும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த மூதாட்டி மரணம்



ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரூ.200 ஓய்வுதியம் பெறுவதற்காக நாள் முழுவதும் காத்திருந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வட்டாரபஸ்தியைச் சேர்ந்தவர் லக்ஷ்மம்மா(60). முதியோருக்கான ஓய்வூதியம் பெறுபவர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி அதை அவர்கள் எடுக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

வட்டாரபஸ்தி பகுதி முதியோருக்கு மே 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அம்பர்பேட் தாலுகாவில் உள்ள ஒரு மையத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து லக்ஷ்மம்மா ஸ்மார்ட் கார்டு வாங்க அம்பர்பேட் மையம் சென்றார்.

அங்கு அவர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை தண்ணீர், உணவின்றி கொளுத்தும் வெயிலில் காத்திருந்தார். ரூ.200 ஓய்வூதயத்திற்கான ஸ்மார்ட் கார்டை பெற மணிக்கணக்கில் வெயிலில் நின்றார்.

மதிய வேளையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை- கோவையிலும் மாணவி தற்கொலை



நெல்லை: பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி.

நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார்.

இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார்.

இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக 7.2 மில்லியன் டாலர் ஓவியத்தை ஏலம் விட்ட மடோனா



நியூயார்க்: விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளை ஏலத்தில் விடுவதாக கூறி 7.2 மில்லியன் டாலருக்கு ஒரு ஓவியத்தை மடோனா விற்றுள்ளார்.

பாப் இசை உலகில் பெயரும், புகழும் பெற்று விளங்குபவர் மடோனா . இவர் பெண்கள் கல்வியிலும் ஆர்வம் கொண்டு, ரே ஆப் லைட் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

இத்தொண்டு நிறுவனம் மூலம், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள பெண்களின் கல்விக்கு மடோனா உதவி புரிந்து வருகிறார். 3.4 மில்லியனுக்கு வாங்கிய ஓவியம்...

கடந்த 1990ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தில், மடோன்னா, பிரான்ஸ் நாட்டு ஓவியரான பெர்னாண்ட் லெகரின் ஓவியம் ஒன்றை 3.4 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தார். வட்டம்... சதுரம்...

1921ஆம் ஆண்டு வரையப்பட்ட, கியூபிஸ்ட் ஆர்ட் என்ற வகையைச் சேர்ந்த அந்த ஓவியத்தில், மூன்று பெண்களின் உருவம், சதுரங்கள், வட்டங்கள் போன்ற வடிவங்களில் வரையப்பட்டிருக்கும்.

விலை மதிப்பில்லாத பெண்கள் கல்வி... செவ்வாய்க் கிழமை அன்று ஏலத்திற்கு முன்னால், விலைமதிப்பில்லா பெண்களின் கல்விக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளை ஏலத்தில் விடுவதாக மடோனா கூறி இருந்தார். 7.2 மில்லியனுக்கு விற்பனை... இந்த ஓவியம் ஏலத்தில் 7.2 மில்லியன் டாலரை அவருக்குப் பெற்றுத்தந்தது.

இதற்குத் துணை புரிந்த அனைவருக்கும், இணையதளத்தின் மூலம் மடோன்னா நன்றி கூறியிருந்தார் . பெண்கல்விக்காக செலவிடப்படும்... இந்தத் ஏலத்தொகை முழுவதும் அவரது தொண்டுநிறுவனத்தின் மூலம் பெண்களின் கல்விக்காக செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார் மடோனா.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் மாநிலத்திலேயே முதலிடம்



சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர்.

1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர்.

1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்), ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர்.

இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

தமிழ் முதலிடம்:

பிளஸ் 2 தேர்வில் 199 மதிப்பெண்கள் பெற்று மாணவி சிந்துஜா தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி சிந்துஜா கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

ஆங்கிலம் முதலிடம்:

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ரங்கா ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். மாணவர் ரங்கா ஸ்ரீஜெயன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆவார்.

புதுவையில் முதலிடம்:

புதுச்சேரி மாநிலத்தில் மாணவர் வேணுசீனிவாசன் முதலிடம் பிடித்தார். பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வேணு 1189 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

வெள்ளையான சருமத்தைப் பெறுவதற்கான டிப்ஸ்



சினிமா நடிகைகளும், பத்திரிக்கைகளில் இடம் பெறும் பெண்களும் எப்படி இவ்வளவு அழகாக தோற்றம் அளிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அவர்களை போல் அழகாக இருக்க முடியவில்லையே என்று ஏங்கியது உண்டா? அப்படியெனில் வெள்ளையான சருமத்தைப் பெறுவதற்கு சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, வெள்ளையாக அழகாக மின்னுங்கள்.

* முகத்தில் ஏற்கனவே ஏதாவது அழகுப் பொருள் பூசப்பட்டு இருந்தால், முதலில் அதை நீக்கவும். அதுவும் அழகுப் பொருளை துடைக்கும் கருவி அல்லது அட்டை மூலமாக முகத்தில் இருக்கும் க்ரீம்களை நீக்கலாம்.

இதை தினந்தோறும் செய்யாவிட்டால், சருமம் விரைவில் முதிர்ச்சி அடைந்து, சரும துவாரங்கள் அடைக்கப்பட்டு கரும்புள்ளிகள், கருவளையம் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். ஆகவே காலையிலும் இரவிலும் சுத்தம் செய்து, மெருகூட்டுங்கள்.

* காலையிலும், இரவிலும் உங்கள் சருமத்தை ஈரப்படுத்த வேண்டும். அதிலும் உலர்வான சருமம் இருந்தால், பகல் நேரங்களிலும் சருமத்தை ஈரப்படுத்தலாம். முகம் முழுவதும் நல்ல ஈரப்படுத்தும் மாய்ஸ்சுரைசர் பொருளை பயன்படுத்துவது அவசியம்.

பகலுக்கும், இரவுக்கும் ஏற்ற ஈரப்படுத்தும் சாதனத்தை பயன்படுத்த வேண்டும். சுருக்கங்கள் தோன்றுவதை நீக்க விரும்பினால், சுருக்கங்களை தடுக்கும் ஈரப்படுத்தும் சாதனத்தை பயன்படுத்தலாம்.

அழகு சாதனம் பூசிக் கொள்ளும் முன்பும், பின்பும் இதை செய்ய மறக்க வேண்டும். இதனால் நாள் முழுவதும் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் பெற்றிடலாம்.

* ஃபௌவுண்டேஷன் திரவம், பௌடர் அல்லது க்ரீம் ஆகியவற்றை வாங்க முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக சரும நிறத்திற்கு பொருத்தமான நிறத்தை வாங்க மறக்கக் கூடாது. சீரற்ற சரும நிறத்தை நிரப்பி, சருமத்தை மென்மையாக்க திரவம் சிறந்தது.

புள்ளிகளையும், வடுக்களையும் நீக்க பௌடர் சிறந்தது. சில அழகுக்கலை நிபுணர்கள் இரண்டையும் பயன்படுத்துவார்கள்.

ஆனால் உங்கள் விருப்பப்படி நீங்கள் ஒப்பணை செய்து கொள்ள வேண்டும். நல்ல ஃபௌண்டேஷன்கள் உதாரணமாக க்ரீம்கள் அதிகமாக இருக்கும் ஃபௌண்டேஷன்கள் சரும துவாரங்களை அடைக்காது. அனைத்து சருமங்களுக்கும் ஏற்ற ஃபௌண்டேஷன் என்று விற்கப்படும் எதையும் வாங்காதீர்கள், பெரும்பாலும் அவை அவ்வாறு செயல்படுவது இல்லை.

* நல்ல கன்சீலர் வாங்கவும் முதலீடு செய்ய வேண்டும். இதனால் ஃபௌண்டேஷன் விட்டு வைத்த புள்ளிகள் மற்றும் மாசுகளை இவை மறைத்துவிடும். மேலும் இரவில் சரியாக உறங்காததால் ஏற்படும் கருவட்டங்களை குறைக்கவும், இவை உதவும்.

குறிப்புகள்: சருமத்திற்கு ஏற்ற ஈரமாக்கும் பொருளை பயன்படுத்த மறக்காதீர்கள்/ உதாரணமாக உலர்வான, எண்ணெய் பிசுக்கான, சாதாரண சருமத்திற்கு ஏற்ற ஈரமாக்கும் பொருட்களை பயன்படுத்தவும். சரியான நிறத்தை உடைய ஃபௌண்டேஷனை வாங்க வேண்டும். அதுவும் பரிசோதித்த பிறகே அவற்றை வாங்க வேண்டும்.

திருமண ஆசைகாட்டி உல்லாசம் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக பெண் போலீஸ் உண்ணாவிரதம்



உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் போலீஸ் ஒருவர் 2 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட பின்னர் கைவிட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பர்மிந்திர சிங் தோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முக்தா மெஹ்ரா (28) டேராடூனில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் முன்னால் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனால், பதற்றமடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் முக்தா மெஹ்ராவை தூக்கிச் சென்று வேறு இடத்தில் விடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

தற்போது நாரி நிகேதன் பகுதியில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் அவர், 'என்னை கொன்று விடுவதாக பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்' என்று கூறியுள்ளார்.

தோனி மீது கேஸ்



இந்து கடவுளான விஷ்ணு போல "போஸ்" கொடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சி்ங் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி, ஒரு வணிக பத்திரிகை விளம்பரத்துக்கு, இந்து கடவுளான விஷ்ணு போல "போஸ்" கொடுத்துள்ளார்.

விஷ்ணுவின் கையில் ஆயுதம் இருப்பதற்கு பதிலாக டோனியின் கையில் ஷூ வைத்திருப்பது போல அந்த காட்சி உள்ளது.

இதனை எதிர்த்து பெங்களூரை சேர்ந்த ஜெயகுமார் ஹைர்மேத் என்பவர், 6வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்த விளம்பரம் மூலமாக இந்துக்களின் மனதை, டோனி புண்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் சூரிகான், வரும் 12ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

அழகாய் தெரியும் ஆபத்தான கடற்கரை



இங்கே குளிப்பது ஆபத்தானது என்ற பாதாதைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் Mauritius தீவுகளில் காணப்படும் இந்த விசித்திரமான கடற்கரை பலரையும் வெகுவாக கவர்ந்துவருகிறது.



கிறிஸ்டல் போன்று நீலநிறத்தில் காணப்படும் இதன் நீரில் அமோனியாவின் செறிவு மிக அதிகமாக காணப்படுகிறது (Ammonia at 11.5pH and Bleach at 12.6pH ) இத்தகைய நீரில் குளிப்பதால் தோல் சார்ந்த நோய்கள் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அத்துடன் குப்பைகளும் வாகனங்களின் கழிவுகளும் காணப்படுவதால் பாவனைக்கு உகந்தநிலையில் இக்கடற்கரை காணப்படவில்லை, எனினும் இதில் தினமும் பலர் குளித்துவிட்டு செல்கின்றதை காணமுடிகிறது.

இந்தியாவில் தங்கப் பதுமைக்கு நடந்த திருமணம்!


இந்தியாவின் மிக பெரிய தங்க நகைகள் அடகு நிலையம் கேரளாவில் உள்ளது.

இதன் பெயர் முதூத் நிதி நிறுவனம்.

இதன் நிறைவேற்று இயக்குனருடைய மகளுக்கு கடந்த வருட நடுப் பகுதியில் திருமணம் நடந்தது.

மணப் பெண் தங்க மயமாக காட்சி கொடுத்தார்.

உடலில் 05 கிலோ தங்க நகைகளை அணிந்து இருந்தார்.

இந்தியாவில் தங்கப் பதுமைக்கு நடந்த திருமணம்!
 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos