புதுடெல்லி: சூதாட்ட புகாரில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 10 இடை தரகர்களை கைது செய்ய டெல்லி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
நடப்பு ஐ.பி.ல் பொடியில் ஸ்ரீசாந்த் உட்பட 3 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 11 இடை தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 10 இடை தரகர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிரிக்கெட் வீரர்களுக்கு எராளமான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை தரகர்கள் அவர்களின் வலையில் விழவைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனிடையே சூதாட்டதில் ஈடுபட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கர்நாடக, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்களில் ஆவேச போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஐ.பி.ல் சூதாட்டங்களை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்த போவதாக திராவிட கழகம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் ஐ.பி.ல் போட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
இதனிடையே சூதாட்டபுகாரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் இடை தரகர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீசாந்த் ஒரு அப்பாவி என அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவில் பணி புரிந்து வந்த சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோரை அந்நிறுவனம் இடை நீக்கம் செய்துள்ளது.
சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் நடப்பு ஐ.பி.ல் போட்டிகளில் 15 போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவதுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் ஆர்பாட்டம்
ஐ.பி.எல் போட்டிகளை தடை செய்யக் கோரி நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சூதாட்ட புகாரில் சிக்கி கைதாகியுள்ள மூன்று ஐ.பி.எல் வீரர்களின் புகைப்படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
ஐபிஎல் போட்டிகள் சூதாட்டத்தை ஊக்குவிப்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்று ரசிகர்கள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.





Post a Comment