ஈரானில் கடும் நிலநடுக்கம்: 70 கிராமங்கள் சேதம்



டெஹ்ரான்: ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது.

ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப்பகுதிகளில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த மாதம் ஈரானில் 7.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos