பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் மாநிலத்திலேயே முதலிடம்



சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர்.

1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர்.

1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்), ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர்.

இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

தமிழ் முதலிடம்:

பிளஸ் 2 தேர்வில் 199 மதிப்பெண்கள் பெற்று மாணவி சிந்துஜா தமிழ் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி சிந்துஜா கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

ஆங்கிலம் முதலிடம்:

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ரங்கா ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். மாணவர் ரங்கா ஸ்ரீஜெயன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆவார்.

புதுவையில் முதலிடம்:

புதுச்சேரி மாநிலத்தில் மாணவர் வேணுசீனிவாசன் முதலிடம் பிடித்தார். பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வேணு 1189 மதிப்பெண்கள் பெற்று புதுவை மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos