டிராவிட்டுக்கு "அவுட்' கொடுத்த அசாத்



புதுடில்லி: பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த சர்ச்சைக்குரிய அம்பயர் அசாத் ராப். ஐந்தாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது, மும்பையை சேர்ந்த "மாடல்' அழகி லீனா கபூர், இவர் மீது செக்ஸ் புகார் கொடுத்தார். இதற்கான ஆதாரமாக போட்டோக்களை வெளியிட்ட அவர், பின் வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இப்போது கிளம்பியுள்ள சூதாட்ட சர்ச்சையில் அசாத் ராப் சிக்கியுள்ளார். இதனால், வரும் ஜூன் 6ல் இங்கிலாந்தில் துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அம்பயர் பட்டியலில் இருந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக நீக்கியது.

இந்த ஆறாவது தொடரில் அசாத் ராப், 14 லீக் போட்டிகளில் அம்பயராக இருந்தார். இதில் மும்பையில் பங்கேற்ற இரு போட்டிகளில், அசாத் ராப் செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* கடந்த ஏப்., 29 ம்தேதி மும்பைக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டன. குல்கர்னி வீசிய முதல்பந்து அளவுக்கு அதிகமான உயரத்தில் சென்றதால், அம்பயராக இருந்த அசாத் ராப், "நோ-பால்' கொடுத்து எச்சரித்தார்.

அடுத்த பந்தையும் இதேபோல குல்கர்னி வீசிய போதும், "நோ-பால்' தரவில்லை. இப்போட்டியில் மும்பை 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

* மே 15ல் மும்பை இலக்கை (166/8) விரட்டியது ராஜஸ்தான் அணி. கேப்டன் டிராவிட் 4 ரன்கள் எடுத்த போது, ஜான்சன் பந்தை எதிர்கொண்டார். சற்று "பவுன்சராக' வந்த இதை விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட்டார் டிராவிட். ஆனால், அசாத் ராப் "கேட்ச்' என, தீர்ப்பு கொடுத்து அதிர்ச்சி தந்தார். இதில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos