தமிழில் ஏற்கனவே ஒரு ‘பாயிண்ட் ஆப் வியூவ்’ படம் ரிலீஸானது கூட தெரியாமல் தமிழில் இதுதான் முதல் ‘பாயிண்ட் ஆப் வியூவ்’ படம் என்று படத்தின் போஸ்டர்களில் கொட்டை எழுத்தில் போட்டுக்கொண்ட நடிகை அம்பிகாவின் தம்பியிடம் ‘இது பொய்யான தகவல்’ என்று ஒரு சீனியர் ரிப்போர்ட்டர் சொன்னதால் டென்ஷனானார்.
1980-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியான ஹீரோயினாக நடித்தவர் தான் அம்பிகா.
திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர நடிகையாக அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டிவரும் அம்பிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் ரொம்ப லோக்கலான அம்மா கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது தனது பல ஆண்டு நடிப்பு அனுபவத்தை வைத்து அவர் தனது தம்பி சுரேஷ் உடன் நிழல் என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகியிருக்கிறார்.
மலையாளம்,தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப்படத்துக்கு மலையாளத்தில் அனபெல்லா
என்ற டைட்டிலையும் தமிழில் நிழல் என்ற டைட்டிலையும் வைத்திருக்கிறார்கள்.
ஒண்ணே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய இந்தப் படம் பி.ஓ.வி. (பாயிண்ட் ஆப் வியூ) வகையறா படம். அதாவது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என்று யாரும் கிடையாது. படத்தில் நடிக்கும் கலைஞர்களே கேமராவை பிடித்துக் கொண்டு அவர்களே அவர்களை படம் பிடித்துக் கொண்டு நடிக்கும் பாணி இது. இதன் மூலம் படம் பார்ப்பவர்களும் படத்தினூடே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படும் என்றும் சொன்னார் படத்தின் டைரக்டர்களில் ஒருவரான அம்பிகாவின் தம்பி சுரேஷ் நாயர்.
திகில் படமாக தயாராகியிருக்கும் இந்தப்படத்தில் ஹீரோவாக மேஜர் கிஷோரும், ஹீரோயினாக இந்து தம்பி அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ப்ரஷூன் கிருஷ்னா, ஜோ, வெங்கட், ப்ரதீப் சந்திரன், அஜீத் குமார், ஷ்ருதி என பலரும் நடிக்கிறார்கள்.
படத்தைப்பற்றி படத்தில் நடித்திருந்த எல்லோரும் தமிழ் தெரியாது என்று சொல்லிக்கொண்டே மணிக்கண்க்கில் பேசி வந்திருந்த மீடியாக்களை கடுப்பேற்ற, அம்பிகாவின் தம்பி சுரேஷோ ஒருபடி மேலேபோய் ‘இந்த பாயிண்ட் ஆப் வியூவ்’ன்னா என்று ஆரம்பித்து ஏற்கனவே இதே மாதிரி தமிழில் ‘இரவு’ என்றொரு படம் வெளிவந்தது தெரியாமலேயே விவரித்துக்கொண்டிருந்தார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவர் “ இந்தப்படம் மலையாளத்தில வேணும்னா முதல் ‘பாய்ண்ட் ஆப் வியூவ்’ படமா இருக்கலாம். ஆனா இதே மாதிரி 4 வருஷத்துக்கு முன்னாடியே தமிழில் ‘ஓர் இரவு’ன்னு ஒரு பாய்ண்ட் ஆப் வியூவ் படம் ரிலீஸ் ஆயிடுச்சி, அப்படியிருக்கும் போது இந்தப்படத்தை எப்படி ‘தமிழில் முதல் பாய்ண்ட் ஆப் வியூவ் படம்’னு போஸ்டர்ல போடுவீங்க? என்று கேட்டார்.
அவருக்கு பதில் சொன்ன சுரேஷ் நாயர் “ இல்லை நான் கூகுளில் முழுசா தேடிப்பார்த்துட்டேன், அப்படி எந்த படமும் வந்தமாதிரி தகவல் இல்லை” என்றார்.
அவர் சொல்வது உண்மைதானா? என்று நாமும் அந்தப்படத்தைப் பற்றி கூகுளில் தேடிப்பார்த்தோம், ஆனால் மீடியாக்களிடம் கூட பிரபலங்கள் கொஞ்சமும் பொய் சொல்ல கூச்சபடுவதில்லை என்பது மட்டும் உண்மையானது.
Post a Comment