புதியவர்களின் அறிமுகம் தமிழ்சினிமாவை ஒரு புதிய ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்வது ஒருபுறமிருக்க, அவர்கள் சிந்தனையும் அப்படியே இருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
ஆமாம், ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற வித்தியாசமான டைட்டிலில் வெற்றிப்படத்தைக் கொடுத்த நிறுவனம் அடுத்து நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது.
ஏற்கனவே இவர்கள் தயாரித்து வரும் ஒரு படத்துக்கும் இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று டைட்டில் வைத்திருக்கும் இவர்கள் இதிலும் விஜய் சேதுபதியைத்தான் ஹீரோவாக போட்டிருக்கிறார்கள்.
அடுத்து மீண்டும் இதே கவனிக்கத்தக்க தலைப்புடன் டைட்டிலான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.
நகைச்சுவையுடன் கூடிய சமூக அக்கறையுடன் தயாராகி வரும் இந்தப் படத்தை என்.ஜே கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அனேகமாக இந்தப்படத்திலும் விஜய்சேதுபதி ஹீரோவாக இருக்கலாம் என்று இப்போதே கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
Post a Comment