டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்து செமத்தியான குத்தாட்டமும் போட்டு அசத்தியுள்ளாராம் பூனம் பாஜ்வா.
ஹரி டைரக்ட் செய்த சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
சமீபகாலமாக தமிழில் எந்த புதிய பட வாய்ப்பும் இல்லாததால் சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,"எதிரி எண் 3” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஒரு டிவி ரிப்போர்ட்டர் கேரக்டரில் நடித்துள்ளார் பூனம் பஜ்வா. இதில், வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், "ரிஸ்க்’ எடுத்து நடித்துள்ளாராம். மேலும், முதன்முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கும் இந்தப்படத்தில் செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறாராம் பூனம்பாஜ்வா.
Post a Comment