ஓவர் அளப்பறை : காஜல் அகர்வாலுக்கு ‘வார்னிங்’ கொடுத்த டைரக்டர்


ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக அலப்பறை செய்ததால் தாங்க முடியாத டைரக்டர் நடிகை காஜலுக்கு வார்னிங் கொடுத்தார்.

அறிமுகப்படுத்திய பாரதிராஜாவிடமே “ அந்தப்பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சவ...” என்று சில மாதங்களுக்கு முன்பு பாராட்டு பத்திரம் வாங்கியவர் தான் காஜல் அகர்வால்.

நடிக்க வந்த புதிதில் வாயை பொத்திக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த இடமே தெரியாமல் போகும் நடிகைகள் ஒரு படம் ஹிட்டானவுடன் ஒரு லெவலுக்கு வந்து விடுகிறார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் காஜல்.

எப்போதுமே திமிர்த்தனமாக பேசுவது, தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது என சர்ச்சைகளில் சிக்கும் இவருக்கு சமீபத்தில் அவர் நடித்த துப்பாக்கி படம் ஓடினாலும் ஓடியது சமீபகாலமாக அவரது அலப்பறை தாங்க முடியவில்லையாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதே காதில் போனை வைத்தபடி தான் எண்ட்ரி கொடுப்பாராம். அப்படி அவர் உள்ளே நுழைந்ததும் அவரது அஸிஸ்டெண்ட்டுகள் சேரை எடுத்துப்போட, ஷாட் ரெடியாகிக் கொண்டிருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் போனில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருப்பாராம்.

ஆனால், டேக் வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கும் டைரக்டரோ, இவர் எப்போது பேசி முடிப்பது, டயலாக் பேப்பரை கொடுத்து நான் ஷாட் வைப்பது என்று நொந்து கொண்டிருப்பாராம்.

இந்த சமாச்சாரம் தினமும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்கதையாகி விட டென்ஷனான டைரக்டர் ராஜேஷ் ஒருநாள் காஜலிடம் நேரடியாகச் சென்று தனது எரிச்சலை கொட்டித்தீர்த்து விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இனிமேலும் இதேமாதிரி நீங்க போன் பேசிக்கிட்டிருந்தீங்கன்னா.. நான் உங்களை மாத்துறதை தவிர வேற வழியில்லை என்று எச்சரிக்கை செய்யாத அளவுக்கு சொல்லிவிட்டாராம். 

டைரக்டரின் இந்த எச்சரிக்கையை கொஞ்சமும் எதிர்பார்க்காத காஜல் இப்போது ஷூட்டிங் ஸ்பாட் என்றாலே மொபைல் போனை விட்டு 500 மீட்டர் தள்ளித்தான் இருக்கிறாராம்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos