அரசியல் ஆவேத்தினால் ஆட்டம் கண்டு கிடக்கிறார் வடிவேலு. கேமராவுக்கு முன்பு அவர் ஆக்டு கொடுத்து இரண்டு வருசமாச்சு. இப்போது கேமராவுக்கு முன்பு அவர் நின்றால், யார் இது புதுமுகமா? என்று கேமராவே கேட்கிற அளவுக்கு அவரை மறந்து போயிருக்கும்.
ஆனால் இந்த நிலையிலும், வடிவேலுவை வைத்து ஒரு பெரிய நிறுவனம் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. அரசியல் எதிர்ப்புகள் இருந்தாலும் படத்தை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கி நிற்கிறது.
ஆனால், தற்போது கதை விவாதம் முடிந்து படப்பிடிப்புக்கு தயாராகி வரும் நேரத்தில், வடிவேலு குறுக்கிட்டு, கேமராமேன் முதல் படத்தின் இடம்பெறும் அத்தனை டெக்னீஷயன்களும் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லி அதிகப்படியாக சம்பளம் வாங்கும் நபர்களாகப்பார்த்து கைகாட்டுகிறாராம்.
அவர் சொல்பவர்களை வைத்து படம் பண்ணினால் பல கோடிகள் பட்ஜெட் ஆகி விடுமாம்.
இதனால் இவரை வைத்து படம் பண்ணுவதே ரிஸ்க். இந்த நேரத்தில் தான் விரும்பிய நபர்களை வைத்துதான் படம் பண்ண வேண்டும் என்று கண்டிசன் போட்டால் எப்படி என்று புரியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார் படாதிபதி.
Post a Comment