காமெடி நடிகர்களின் இன்னொரு முகம்



சென்னை : ‘காமெடி நடிகர்களுக்கு அதை விட்டால் வேறென்ன தெரியும்?’ என்று பலர் கிண்டலாக விமர்சிப்பது உண்டு. ஆனால், சிரிக்க வைப்பதுடன் மட்டுமின்றி, சினிமாவின் மற்ற துறையிலும் தங்களுக்கு அனுபவம் உண்டு என்று பல காமெடி நடிகர்கள் நிரூபித்துள்ளனர்.

சிலர் நிரூபித்தும் வருகின்றனர். சீனியர்களில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படம் இயக்கினார், தயாரித்தார். சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் போன்றோரும் தயாரிப்பில் ஈடுபட்டனர். நாகேஷ் படம் இயக்கினார். சினிமா தியேட்டரும் கட்டினார்.

கவுண்டமணி நடிப்பை தவிர வேறு துறைகளில் நாட்டம் செலுத்தவில்லை.

இப்போது விவேக், படம் இயக்க ஆயத்தமாகியுள்ளார். கருணாஸ் சினிமா வினியோகஸ்தராக இருந்து, தற்போது கென் மீடியா நிறுவனம் சார்பில் படம் தயாரித்து நடிக்கிறார்.

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘ஒரு கூடை முத்தம்’ படங்களை தம்பி ராமையா இயக்கினார். கஞ்சா கருப்பு, ‘வேல்முருகன் ஃபோர்வெல்ஸ்’ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். சினிமா ஷூட்டிங்கிற்கு கிரேன்களை வாடகைக்கு விடுகிறார், கிரேன் மனோகர். டி.பி.கஜேந்திரன், ‘ஆச தோச’ படத்தை தயாரித்து இயக்குகிறார்.

ரெட்’, ‘மாயாவி’ படங்களை இயக்கினார் சிங்கம்புலி. ‘மழையில் நனைந்த தங்கம்’ மூலம் ஹீரோவாக மாறும் வையாபுரி, விரைவில் படம் இயக்க உள்ளாராம்.

விவேக் குழுவில் இருந்த காகா கோபால், படம் இயக்க உள்ளாராம். ‘காதல்’ சுகுமார், ‘திருக்குரல்’ (‘ள்’ அல்ல) என்ற படத்தை இயக்கி வருகிறார். மயில்சாமியும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வி.டி.வி கணேஷ் படத் தயாரிப்பு பணியிலும் இறங்கியுள்ளார்.

முன்னணி காமெடி நடிகர் சந்தானம், நடிப்பில் இடைவெளி ஏற்படும்போது, படம் இயக்க, கதை எழுதி வைத்திருக்கிறார்.

சீனியர் நகைச்சுவை நடிகை மனோரமா, தன் மகன் பூபதி ஹீரோவாக நடித்த படத்தை தயாரித்தார். கோவை சரளாவும் தெலுங்கில் பானுசந்தர் மகன் ஜெயந்த் நடித்த படத்தை தயாரித்தார்.

இப்படங்களின் மூலம் கையை சுட்டுக்கொண்டதால், அவர்கள் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.

காமெடி நடிகர்களின் இன்னொரு முகம்
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos