நடிகர் சங்கம் நடத்திய ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொள்ளாமல் 'தலைவா' படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய் அடுத்து ஜில்லா படத்திற்கு தயாராகி வருகிறார்.
துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தலைவா படப்பிடிப்பில் பிஸியானார் விஜய். இந்தப்படத்தை அடுத்து அவர் ஜில்லா என்ற புதிய படத்திலும் நடிக்க ஓ.கே சொன்னார். நேசன் டைரக்ட் செய்யும் இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி செளத்ரி தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 13- ஆம் தேதி மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பில் மோகன்லால், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படுகின்றன. மதுரையில் சுமார் 18 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிறர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்கிறார்.
ஜில்லா படத்தில் விஜய் ‘ஷக்தி’ என்ற கேரக்டரில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
Post a Comment