சந்தானத்தை தனது படங்களில் நடிக்க வைத்து பெரிய நடிகராக்கியவர் சிம்பு. அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் விடிவி.
கணேஷையும் நடிக்க வைத்தார். அவரும் இப்போது பெரிய நடிகராகி விட்டார். அதிலும் இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் மீரா ஜாஸ்மின். அதோடு சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்த படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தால், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப்போன்று தனது படமும் வெற்றி பெறும் என்று நினைத்த கணேஷ், இதுபற்றி சிம்புவிடம் பேசினாராம்.
நான் நடித்தால் உங்கள் படத்துக்கு ப்ளஸாக இருக்கும் என்று நினைத்தால் கண்டிப்பாக நடிக்கிறேன். இதில் எனக்கு எந்த ஆட்சேபனையும இல்லை என்று நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.
ஆனால், தற்போது வேட்டை மன்னன் படத்தில் பிசியாக இருக்கும் சிம்பு, இன்னமும் கால்சீட் கொடுக்கவில்லையாம். அதனால் சிம்பு தனது படத்தில் நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறார் விடிவி.கணேஷ்.
Post a Comment