சென்னை: விழுப்புரத்தை அடுத்து திருச்சியில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கிறார் இளைய தளபதி விஜய்.
நடிகர் விஜய்யின் விழுப்புரம் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கராபுரம், முகையூர், சின்னசேலம், வானூர், ரிஷிவந்தியம், செஞ்சி, மேல்மலையனூர், திருநாவலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி இலவச திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் விஜய் ரசகிர்கள் அவரைப் பார்க்கும் ஆர்வத்தில் திருமண மண்டபத்தின் கதைவை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடி வர விஜய் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க என்று ஒரே கலாட்டாவாகிவிட்டது.
இந்நிலையில் வரும் 12ம் தேதி திருச்சியில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார் விஜய். இந்த முறை விழுப்புரம் போன்று எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment