இனி காதல் இல்லை, ஸ்டிரைட்டா கல்யாணம்



சிம்புவை எஸ்டிஆர் என்றே இப்போது குறிப்பிடுகிறார்கள். ஏன் அவரேகூட அப்படிதான் சொல்கிறார். அதனால் இனி நமக்கும் சிம்பு எஸ்டிஆர் தான்.

எஸ்டிஆர் எந்த வழியில் சென்றாலும் வம்பு மட்டும் பின் தொடரும். சைலண்டாக இருக்கும் நேரத்திலும் ஹன்சிகாவுடன் காதலா? நயன்தாராவுடன் பாசமா? என்று விதவிதமாக கிலி கிளப்புகிறார்கள். 

இதற்கு பதிலளித்துள்ளவர், இனி நம்ம லைஃப்ல காதல் எல்லாம் இல்லப்பா, வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க, இனி ஸ்ட்ரைட்டா கல்யாணம்தான் என்று பதில் தந்திருக்கிறார்.

தென்தமிழகம் பக்கம் பெண் பார்த்திருப்பதாகவும் சேதி உள்ளது. எப்படியிருப்பினும் இந்த வருடம், தவறினால் அடுத்த வருடம் பெற்றோர் பார்க்கிற பொண்ணுக்கு எஸ்டிஆர் தாலி கட்டுவார் என்பது உறுதி என்கிறார்கள்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos