இதுதான் இப்போது ஹாட். ஏஜிஎஸ் தயாரிக்கும் தெனாலிராமன் படத்தில் வடிவேலு ஜோடியாக, அஜித்தின் பில்லா 2 வில் நடித்த பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறாராம்.
இந்த செய்தியை சொல்லும் அதேநேரம் அஜித், வடிவேலு தீராப்பகையை சொல்லியாக வேண்டும்.
எழில் இயக்கி படம் ஒன்றில் இவர்கள் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் என்ன சண்டையோ. வடிவேலு படத்தை போஸ்டரில் போட வேண்டாம் என்று அஜித் சொன்னதாக ஒரு புரளி. இது உண்மையா பொய்யா இன்றுவரை தெரியாது. ஆனால் வடிவேலு, ஒரு நடிகன் என் படத்தை போட வேண்டாம்னு சொன்னான், பிறகு படம் ஓடாம என்னோட படத்தைதான் போஸ்டரில் பெரிசா போட்டாங்க என்று வெளிப்படையாகவே பேசினார். அதற்குப் பிறகு வடிவேலு, அஜித் இணையவேயில்லை.
இப்படியொரு சூழலில் அஜித்தின் புதிய படம் ஒன்றுக்கு ஸ்ரேயாவிடம் பேசினர். நடிக்க ஒப்புக் கொண்ட அவர் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு வடிவேலுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். உடனடியாக அஜித் ஸ்ரேயாவை தனது படத்திலிருந்தே தூக்கினார். அதன் பிறகு அவர்களும் இணைந்து நடிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் வடிவேலுக்கு பார்வதி ஓமன குட்டனை ஹீரோயினாக்கியிருப்பதை பலரும் பலவித கோணங்களில் பேசி வருகிறார்கள். தயாரிப்பு தரப்பில் பார்வதி நடிப்பதாக சொன்னாலும் அவர் இதுவரை விடிவேலுவின் ஜோடியாக நடிப்பது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment