ஏற்கனவே அரை டஜன் படங்கள் ஒத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மேலுமொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
கமல்ஹாசன் உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ஜெய் கிருஷ்ணா தயாரிப்பாளர் ஹிதேஷ் தேஷ்முக்கிற்காக ஒரு படம் இயக்குகிறார். நட்பின் பெருமையைச் சொல்லும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கிருஷ்ணா கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
பாலபரணி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் பிற நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.





Post a Comment