மாமல்லபுரம் அருகே கார்கள் மோதல் : மூன்று பேர் உடல் நசுங்கி பலி



மாமல்லபுரம்:

 மாமல்லபுரம் அருகே, இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில், குழந்தை உட்பட, மூன்று பேர் இறந்தனர். கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில், அறிவியலாளராக பணிபுரிபவர் மனீஷ்குமார், 30; பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். 

இவர் மனைவி தான்யா, 28. இவர்களுக்கு, சமர்த் என்ற, ஏழு மாத மகன் உள்ளான். இவர்கள், விடுமுறைக்கு, சொந்த ஊர் சென்று, சென்னை திரும்பினர். நேற்று காலை, சென்னையிலிருந்து, கல்பாக்கத்திற்கு, இண்டிகா காரில் சென்றனர்.

மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு அருகே, காலை, 7:45 மணிக்கு சென்ற போது, புதுச்சேரியிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற ஸ்கார்பியோ கார், கட்டுப்பாட்டை இழந்து, இண்டிகா கார் மீது மோதியது.

 இதில், தான்யா, சமர்த், காரை ஓட்டி வந்த, சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த, உமாபதி, 32, ஆகியோர், அதே இடத்தில் இறந்தனர். மனீஷ்குமார் பலத்தக் காயத்துடன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 ஸ்கார்பியோ காரில் சென்றவர்கள், விபத்து ஏற்பட்டதும், கீழே குதித்து தப்பியோடினர். அதை ஓட்டி வந்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ், 24, பிடிபட்டார். 

முதல்வர் ஜெயலலிதா, சிறுதாவூரிலிருந்து சென்னை செல்லும் பாதையில், அவர் செல்வதற்கு சற்று முன், இவ்விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் காவல் துறையினர், உடனடியாக வாகனங்களை அகற்றி, பாதையை சரி செய்து, போக்குவரத்தை சீரமைத்தனர்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos