தே.மு.தி.க., விஜயகாந்த் மனைவி பிரேமலதா:
அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் மாறி மாறி ஓட்டுப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள். இதனால், தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, தமிழக மக்கள் விழித்தெழ வேண்டும்.
டவுட் தனபாலு:
"தனியா நிற்போம்; தனியா உக்காருவோம்'னு சொல்ற கட்சிகள் எல்லாம், தேர்தல் நேரத்துல, தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வோட கூட்டணி வெச்சுக்குது... படுத்துட்டு போர்த்துறது, போர்த்திட்டு படுக்கறது, ரெண்டும் ஒண்ணு தான்னு முடிவு பண்ணிய மக்கள், அ.தி.மு.க.,வுக்கோ, தி.மு.க.,வுக் கோ நேரடியா ஓட்டு போட்டுடறாங்க... மக்கள் விழிக்கணும்னு சொல்ற நீங்க, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வெச்சது, தூக்கக் கலக்கத்துலயா... இது தான் என்னோட, "டவுட்!'
நாடு தழுவிய யாத்திரை துவக்கியுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்றுவதற்காகவே, இந்தப் பேரணியை துவக்குகிறேன். அதற்கான ஆதரவு திரட்டும் சுற்றுப் பயணமாக இது அமையும். நாடு முழுமைக்கும் ஏற்படும் விழிப்புணர்வு தான், ஊழலற்ற அரசை மத்தியில் அமைக்கும்.
டவுட் தனபாலு:
ஐ.மு., கூடாரந்தான் கலகலத்துப் போயிருக்குதே... நீங்க சுற்றுப் பயணத்தை முடிக்கறதுக்கு முன்னமே, அது, கலையாம இருந்தா ஆச்சரியம் தான்... நாடு முழுக்க, மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகிட்ட நிலைமைல, தேர்தலுக்கு பிறகு, குதிரை பேரம் நடக்கத் தானே செய்யும்... அப்ப, ஊழலற்ற மத்திய அரசு சாத்தியமாங்கறதுதான், என்னோட, "டவுட்!'
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான அமீத் ஷா ஆகியோருக்கு, முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளதன் மூலம், பா.ஜ., தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொண்டுவிட்டது.
டவுட் தனபாலு:
அடுத்த வீட்டு சமாச்சாரம் உங்களுக்கு எதுக்கு... ஊழல்வாதிகளான சொந்தக்
சுயநலம் கொண்ட கூட்டணி கட்சிகளாலும், உங்க கட்சி, தினம் தினம் செத்துப் பிழைக்கற போதும், வலிக்காத மாதிரியே பேசறீங்களே... சிதம்பரம், ஷிண்டே, பேனி பிரசாத் வரிசையில, நீங்களும் பரபரப்புக்காக தான் இப்படி வில்லங்கமா பேசுறீங்களோன்னு, "டவுட்'டா இருக்கே...!





Post a Comment