ஏப்ரல் 2ஆம் தேதி ஈழத்தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளதையடுத்து அஜித் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் துவக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளுவது பற்றி நடிகர் அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை சிவா இயக்க உள்ளார்.
இப்படத்தின் துவக்க விழா ஏப்ரல் மாதத்தின் 1-ஆம் தேதி அன்று ஹைதராபாத் நகரில் துவங்க இருந்தது .
ஆனால் அஜீத் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால் இப்படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து படத்தின் துவக்க விழாவையும் அதை தொடர்ந்து நடக்க உள்ள படப்பிடிப்பையும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.





Post a Comment