விஸ்வரூபத்தோடு கமல் காலி என்று ஊகித்திருந்த கோடம்பாக்க முதலாளிகள், விஸ்வரூபம் கலெக்ஷனை வாய் மூடாமல் பார்த்துக்கொண்டு இருப்பது நிஜம்தான்.
ஆனால், பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டால் அவர்கள் பிசினெஸ்காரர்களா? அதனால், கமலின் விஸ்வரூபம் பார்ட்-2 ஐ கைப்பற்ற பெரும் முயற்சி நடந்தது இங்கே.
படம் ஐம்பது நாளை ‘கிராஸ்’ பண்ணியிருந்தாலும், இப்பவும் பார்க்கிங் ஃபுல் ஆகிறதாம் சனி ஞாயிற்று கிழமைகளில். இது போதாதா? பார்ட்-2க்கு டிமான்ட் அதிகமாக எகிறிவிட்டது.
முதல் பார்ட்லேயே, வெடிகுண்டுகளை வீசி, ஒரு வழியாக தப்பித்துக் கொண்டார் கமல்.
இந்த இரண்டாவது பார்ட்ல என்னென்ன வில்லங்கம் வச்சுருப்பாரோ என்ற யோசனையும் சிலருக்கு இருந்தது.
ஆனால், தயாரிப்பாளர் சொல்லும் கதையை படம் எடுக்கும் ஆள் அல்ல கமல்.
அப்படியிருந்தும் மூன்று முக்கிய நிறுவனங்கள் விஸ்வரூபம்-2 தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக தெரிகிறது.
இதில் கமலுடன் கிட்டத்தட்ட டீலை பேசி முடித்து விட்டாராம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
கமலை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கப் போகிறார் இவர். அதில் ஒன்று விஸ்வரூபம் பார்ட் 2 என்கிறது கோடம்பாக்கத்து தகவல்.
எதற்கும் ரவிச்சந்திரன் அல்-காய்தா பற்றி கொஞ்சம் தெரிந்து வைப்பது நல்லது.
(அதற்காக அமீரிடம் போய் கேட்காதீர்கள். அவர் தலிபான் ஸ்பெஷலிஸ்ட்! அல்-காய்தா வேறு, தலிபான் வேறு)





Post a Comment