பிரபல நடிகை த்ரிஷா ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை த்ரிஷா தற்போது 'என்றென்றும் புன்னகை' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜீவா ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை அகமது டைரக்ட் செய்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் நடந்தது.
அதன்பிறகு சமீபத்தில் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
த்ரிஷாவுக்கு துணையாக அவரது அம்மா உமாவும் சென்று இருந்தார். த்ரிஷாவுக்கும், உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 'ரூம்' போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு ரகளையிலும் ஈடுபட்டார்.
தயாரிப்பு நிர்வாகிகளிடமும் ஆவேசமாக பேசி சண்டை போட்டாராம். ஆனால் படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதமாக கூறினார்களாம். இதையடுத்து ரூமில் தங்க முடியாது என அடம் பிடித்து படப்பிடிப்புக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
திரிஷா ரகளையால் ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களும் அங்கு திரண்டார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட டைரக்டர் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். த்ரிஷாவை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
பின்னர் அவரின் விருப்பப்படியே அவருடைய அம்மாவுக்கு தனி ரூம் போட்டு கொடுத்தார்களாம். த்ரிஷா செய்த இந்த திடீர் ரகளையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Post a Comment