ஒரே ஷாட்டில் முழு படமும் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த அகடம் படத்தின் ட்ரெய்லரை சென்னையில் இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அபிராமி ராமநாதன் நேற்று வெளியிட்டனர்.
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள அகடம் திரைப்படத்தினை முகமது இசாக் இயக்கியுள்ளார். பாஸ்கர் இசையமைத்துள்ளார். தமிழ், சீனு ஐயர், ஸ்ரீ பிரியங்கா மற்றும் பலர் நடிக்கும் இத் திரைப்படத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மிக நீளமான உலகின் முதல் கின்னஸ் சாதனை படம் இது. முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி இந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
ஒரே ஷாட்டில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 விநாடிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகும் எடிட்டிங் செய்யப்பட வில்லை. நோட்டரி பப்ளிக் வக்கீல், ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் எத்தன் பட இயக்குனர் சுரேஷ் ஆகியோர் சாட்சிகளாகக் கலந்து கொண்டனர்.
எல்லா சாட்சிகளும், ஆவணங்களும் உடனுக்குடன் லண்டனில் அமைந்துள்ள கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கும் அமைப்புக்கு அனுப்பப் பட்டது.
கின்னஸ் சாதனையாளர் விருதுக்கான அங்கீகாரத்திற்கு அனுப்பப் பட்ட அகடம் திரைப்படம், முந்தைய சாதனையான 1 மணி 30 நிமிடம் ஓடக்கூடிய ரஷ்ய மொழிப்படமான ‘ரஷ்ஷியன் ஆர்க்கின்' சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனைக்கான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
2 மணி நேரம் 3 நிமிடம் 30 நொடிகள் விறுவிறுப்பாகச் செல்லும் அகடம் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்ற விழாவில் அகடம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து லண்டனில் இருந்து வழங்கப்பட்ட கின்னஸ் சாதனை சான்றிதழை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்திய சினிமா 100 -வது ஆண்டு விழா கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் , தமிழ் சினிமா ‘அகடம்' கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது இந்தியர் அனைவரும் பெருமைபடக்கூடியதாகும்.
‘அகடம்' படத்திற்கு தணிக்கை அதிகாரிகளால் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள அகடம் திரைப்படத்தினை முகமது இசாக் இயக்கியுள்ளார். பாஸ்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு E.J நெளஷாத், மக்கள் தொடர்பு செல்வரகு.
Post a Comment