‘பில்லா 2’ ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!


மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது.

முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது அஜீத் ரசிகர்களுக்கு. சரியாக 12 மணிக்கு வெளியான உடன் அதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

மே 1 அஜீத் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களை மகிழ்விக்க அவரது பெயரிடப்படாத படத்தின் டீஸர் வெளியானது. உடனே அவரது ரசிகர்கள் டீஸர் பார் ‘தல' டே என்று பகிர்ந்து கொண்டனர்.

அஜீத்தின் பில்லா 2 படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியாகி 48 மணி நேரத்தில் 5,52,399 பேர் அதனை பார்த்து பகிர்ந்தனர்.

அதுவே அஜீத் 53 வது பட டீஸர் வெளியாகி 30 மணி நேரத்திற்குள் அதாவது இந்த செய்தி எழுதும் வரை 8,21,559 பேர் பார்த்து பகிர்ந்துள்ளனர்.

44 செகண்ட் டீஸரில் அஜீத், அவருடன் நடிக்கும் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவரது வெவ்வேறு முக பாவங்கள், பைக்கில் பறப்பது என டீஸரில் வெளியிடப்பட்டுள்ளது.

அப்போ புராஜெக்டோட பேரு என்று யாரோ கேட்க டைட்டில் இன்னும் வைக்கலை என்று கூறுகிறார் அஜீத் யுவன் சங்கர் ராஜாவின் இசை டீஸரில் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

‘பில்லா 2’ ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos