ஸ்ருதி ஹாசனின் பெட்ரூம் போஸ்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு



பாலிவுட் படத்தில் நடிக்கும் ஸ்ருதி பெட்ரூம் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் படமான ‘டி டேவில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதில் அர்ஜுன் ராம்பால் ஹீரோ.

கராச்சி பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. உளவு துறை அதிகாரியாக வரும் அர்ஜுன் ராம்பாலுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் காதல் மலர்கிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது கதை.

இப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ராம்பாலுடன் பெட்ரூம் காட்சியில் நடித்தார். இதற்காக அதிர வைக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆபாசமாக இருக்கும் இந்த போஸ், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்டில்லை தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதியே வெளியிட்டதுடன் அது பற்றி ரசிகர்களிடம் கருத்தும் கேட்டிருந்தார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஸ்ருதி ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘டி டே படத்தில் இடம்பெறும் காட்சிக்கான எனது போட்டோவை பார்த்து சூப்பராக கருத்து சொன்ன ரசிகர்களுக்கு நன்றி.

இதுவொரு உணர்ச்சிகரமான சவால் நிறைந்த வேடம். இதை விரும்புவீர்கள் என்று எண்ணுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தில் ரிஷிகபூர், இர்பான் கான், ஹுமா குரேஷி ஆகியோரும் நடிக்கின்றனர். வரும் ஜூலை மாதம் படம் திரைக்கு வர உள்ளது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos