ஒரு காலத்தில் சினிமாப்படங்கள் வருடக்கணக்கில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களே இரண்டு வாரங்கள் ஓடுவது பெரிய விசயமாகி விட்டது.
ஆனால் இந்த சூழ்நிலையிலும் சமீபத்தில் விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படம் 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அதற்கான விழாவும் சென்னையில் நடந்தது. நீண்டநாளைக்குப்பிறகு ஒரு படத்தின் 50 நாள் விழா கொண்டாடப்பட்டதை அனைவரும் ஆச்சர்ய செய்தியாக கேட்டனர்.
இந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் 100 நாடகள் ஓடி சாதனை படைத்துள்ளது. அதையொட்டி நேற்றையதினம் 100 வது நாள் போஸ்டர் தமிழகத்தில் அப்படம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் நகரங்களில் பிரமாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் கமல் கம்பீரமாக போஸ் கொடுத்தபடி நின்றார்.
இதற்கிடையே பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படமும் 100 நாட்கள் ஓடியுள்ளது.
அந்த சந்தோசத்தை கொண்டாடிய சசிகுமார், அப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு விருது வழங்கி கெளரவப்படுத்தியுள்ளார்.





Post a Comment