கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயனின் காட்டில் ஸாரி... வீட்டில் தான் அதிர்ஷ்டலட்சுமி குடியிருக்கிறாள் போலிருக்கிறது. ஆமாம், இந்த இரண்டு படங்களும் அவருக்கு தொடர் ஹிட் படங்களாக அமைந்து விட்டதால் அவருடைய சம்பளம் தற்போது 2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், லிங்குசாமி தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
இந்த மூன்று படங்களிலும் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ‘எதிர் நீச்சல்’ படத்தை டைரக்ட் செய்த துரை செந்தில்குமார் டைரக்ஷனில், மீண்டும் தனுஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த நான்கு படங்களில் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்யப்போகும் படம் தான் முதலில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
இதற்கிடையே சிவகார்த்திகேயனை ‘மெரினா’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் அவர் அடுத்து டைரக்ட் செய்ய இருக்கும் படத்துக்காக கமிட் செய்யப் போனாராம். ஆனால் அவரை இரண்டு வருடங்கள் காத்திருங்கள் என்று வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டாராம் சிவகார்த்திகேயன்.
இதத்தான் நேரக்கொடுமைன்னு சொல்வாங்களோ..?
Post a Comment