பூமி போன்று வாழ தகுதியுள்ள 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு



அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர்62விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ் கோப் விண்வெளியை துள்ளியமாக போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோவில் பூமியை போன்று 2கிரகங்கள் உள்ளன. அவற்றில் பாறைகள்,வானம், கடல்கள் மற்றும் ஈரத்தன்மையுள்ள காற்று போன்றவை உள்ளன.

எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் தகுதியானவை என தெரிய வந்துள்ளது. அது பூமியில் இருந்து 1200 ஒளி வருட தூரத்தில் உள்ளன.

அதே நேரத்தில் புதன் கிரகத்தில் இருந்து 3 கோடியே 70 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும்,வியாழன் கிரகத்தில் இருந்து 6 கோடியே 50 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும் உள்ளது.

மேலும், அங்கு உயிரினங்கள் வாழ தகுதியுடைய தட்பவெப்ப நிலை நிலவுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியனை விட சிறியதாகவும், மங்கலாகவும் அவை காணப்படுகின்றன.

இந்த 2 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து கெப்லர் விண்கல ஆய்வு திட்ட தலைவர் வில்லியம் போருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கெப்லர் டெலஸ் கோப் கண்டு பிடித்துள்ள பல கிரகங்களில் இது மிகவும் பயனுள்ளது என்றார்.

இப்புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டதை பிட்சா மற்றும் பீர் விருந்துடன் விஞ்ஞானிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos