தமிழ் நாளிதழ்களில், முதன் முதலாக, விண்டோஸ் 8 இயங்குதளத்தில் உங்கள் தினமலரை, தமிழ்ப் புத்தாண்டு பரிசாக வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியாவின் முன்னணி நாளிதழான தினமலர், இப்போழுது விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் படித்து மகிழலாம். அனைவரும் படித்து மகிழும்படி எளிமையான வகையில் இம்மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாக 24 மணி நேரமும், இதற்காக சிறப்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், மாவட்டம், சினிமா, விளையாட்டு, நேரடி கிரிக்கெட் ஸ்கோர், வணிகம், பங்குச் சந்தை, ராசி பலன், புகைப்பட / வீடியோ தொகுப்பு மற்றும் ஏராளமான நிகழ்வுகளை தினமலர், விண்டோஸ் 8 இயங்குதள மென்பொருள் உங்களுக்கு உடனுக்குடன் எளிய முறையில் கொண்டு சேர்க்கும்.
இந்த மென்பொருள், தினமலர் வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். உங்களுடைய மேலான கருத்துக்களை எங்களுக்கு இமெயில் மூலம் தெரிவியுங்கள்.
இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் சாப்ட்க்ராப்ட் சிஸ்டம்ஸ்.
ஏற்கனவே ஐ பேடு, ஐபோன், ஆண்ட்ராய்டு மொபைல், ஆண்ட்ராய்டு டேப், விண்டோஸ்-7 மொபைல் ஆகிய தளங்களில் இயங்கி வருகிறது. தற்போது விண்டோஸ்- 8ல் ( மொபைல் மற்றும் டேப்) வெளியாகிறது.





Post a Comment