சித்தார்த்- சமந்தா காதல் செய்தி தென்னிந்திய சினிமா முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர்கள் இருவருமே இன்னமும் அதைப்பற்றி வாய்திறக்காமல் மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது சமந்தா தெலுங்கில் பிசியாக நடித்துக்கொண்டிருக்க, சித்தார்த்தோ தமிழுக்கு வந்து விட்டார். என்றாலும் அவர்களது காதல் பயணம் தடைபடவில்லையாம். எப்போதும்போல் தினமும் செல்போனில் காதல் உரையாடல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்களாம்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவுக்கு சித்தார்த்-சமந்தா இருவரும் வந்திருந்தனர்.
அப்போது சித்தார்த்தை மேடையில் ஒரு பாட்டு பாட அழைகக, காதலன் படத்தில் இடம்பெற்ற என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் என்ற பாடலை பாடினார்.
அப்போது எதிரில் அமர்ந்திருந்த சமந்தாவைப்பார்த்து அவர் உருகி உருகி பாட, அதை கண்ணிமைக்காமல் பார்த்தபடி ரசித்துக்கொண்டிருந்தார் சமந்தா.
ஆனால், இந்த காதல் லீலையை சுற்றியிருந்த கூட்டமே கண்ணிமைக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது.





Post a Comment