சினிமாவுக்கு வரும் எல்லா நடிகர்களுமே யாரேனும் ஒரு நடிகரின் பாதிப்பில்தான் சினிமாவுக்குள் வருவார்கள். அந்த வகையில், எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் ரஜினியின் வெறித்தனமான ரசிகராம்.
ரஜினி நடித்த படம் தியேட்டருக்கு வருகிறதென்றால் பிளாக்கில் டிக்கெட் வாங்கியாவது முதல் நாள் முதல் காட்சியை பார்க்காமல் ஓயமாட்டாராம்.
அதோடு நில்லாமல், ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுவது, கட்அவுட் வைப்பது என்றெல்லாம் ரஜினி ரசிகராய் வாழ்ந்தவராம்.
அதன்காரணமாக, வாழ்க்கையில் ஒருமுறையாவது ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனுக்கு லட்சியமாகவே இருந்திருக்கிறது.
அதனால், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் நடித்தபோது, ரஜினி சாரை சந்திக்க அழைத்து செல்லுமாறு ஐஸ்வர்யாவை கேட்டுக்கொண்டாராம் சிவகார்த்திகேயன்.
அதன்படி ஒருநாள் தந்தையிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அப்போது ரஜினியைப்பார்த்ததும் அவரையும் அறியாமல் ஆனந்தக்கண்ணீர் கசிந்து விட்டதாம்.
அதையடுத்து தனது தோளில் கைபோட்டபடி போட்டோவுக்கு ரஜினி போஸ் கொடுக்க தனது லட்சியமே நிறைவேறி விட்ட சந்தோசத்தில் போஸ் கொடுத்தாராம் சிவகார்த்திகேயன்.





Post a Comment