"நாட்டாமை செய்கிறார் துரைமுருகன்!'



"லோக்சபா தேர்தலுக்கு தயாராக, இளைஞர்களைக் கவர்றா மாதிரி பிரசாரம் இருக்கணும்ன்னு உத்தரவு போட்டிருக்காங்க...'' என, முதல் தகவலுடன், நாயர் கடைக்கு வந்தார்
அந்தோணிசாமி."

"எந்தக் கட்சி ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா."

"அ.தி.மு.க.,வுலங்க... சமீபத்துல, மேல்மட்ட அமைச்சர்களைக் கூப்ட்டு, லோக்சபா தேர்தலுக்கு எல்லாரையும் தயார்

பண்ணணும்ன்னு, சி.எம்., சொல்லி இருக்காங்க... மாநகராட்சி மேயர்களையும் கூப்ட்டு பேசப் போறாங்க... தி.மு.க.,வுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, எதனால சண்டை வந்ததுன்னு, "உள்' தகவல்கள் எல்லாத்தையும், பிரசாரத்துல சேர்க்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க..."
"குறிப்பா, இளைஞர்கள் மத்தியிலே, தி.மு.க.,வோட, "இமேஜை' கிழிச்சிடணும்ன்னு மும்முரமா இருக்காங்க... இதுக்குன்னு, பிரசார, "பாயின்ட்'களை, எழுதித் தரச் சொல்லி, நெருங்கிய உறுப்பினர்கள்ட்ட, கேட்டிருக்காங்க... எல்லாத்தையுமா ஒருங்கிணைச்சு, காரசாரமா பிரசாரம் இருக்கணும்ன்னு சொல்லி இருக்காங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி."

"நாட்டாமையாட்டாம் செயல்பட ஆரம்பிச்சிட்டாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி."

"யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""மாஜி அமைச்சர், துரைமுருகனை சொல்ல வந்தேன்... சமீபத்துல, மதுரையில நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்துல, அவரு சிறப்புரை ஆற்றினாரு... கூட்டம் முடிஞ்சப்பறமா,
அப்படியே சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டிய அவரு, சந்தடி சாக்குல, மாஜி மத்திய அமைச்சர் அழகிரியை சந்திச்சு, கட்சி தொடர்பான பல்வேறு விஷயங்களை பேசி இருக்காரு... வீட்டுல தொடங்கிய பேச்சு, மதுரை விமான நிலையம் வரை தொடர்ந்திருக்கு வே..."

"அவர்கள் இருவரும் சந்தித்து பேசினது, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு பிடிக்கலே..."துரைமுருகன், பெரிய நாட்டாமை மாதிரி, அண்ணனை பார்த்து பேசியிருக்காரு... அவரோட பேசிய அத்தனை விஷயத்தையும், தி.மு.க., தலைவர்ட்ட மனப்பாடமா ஒப்பிப்பாருன்னு என்ன நிச்சயம்'னு ஸ்டாலின் ஆதரவாளர்கள் புலம்புதாவ வே...'' என, விளக்கினார் அண்ணாச்சி.

"இனி ஆபீஸ் போறவங்க, வீட்டு வேலையை எப்படிச் செய்யணும்ன்னு பழகிக்க வேண்டியது தான் பா...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்."

"அது தான், எல்லாரும் பழகிட்டமே...'' என, பொத்தம்பொதுவாய் பேசினார் குப்பண்ணா.சிரித்த அன்வர்பாய், ""உம்மைச் சொல்லலே... அரசு ஊழியர்களைத் தான் சொல்றேன்... அரசு அதிகாரிங்க சில பேரு, தன் கீழே வேலை பார்க்குறவங்களை, வீட்டு வேலைகளையும் செய்யச் சொல்றாங்க... கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட வனசரக ஆபீசுல வேலை பார்க்குற ஊழியர்களை, உயர் அதிகாரிகள் சில பேரு, அவங்களோட வீட்டு வேலைக்கு பயன்படுத்துறாங்க...

"அதிகாரியோட மனைவி, பிள்ளைகள் எல்லாரும், இந்த ஊழியர்களுக்கு, கூலித் தொழிலாளிங்க செய்யிற வேலை எல்லாம் குடுத்து, செய்யச் சொல்றாங்க... "இதுவரை, இந்த மாதிரி நடந்ததே இல்லே... ஆபீசு போனமா, வேலையைப் பார்த்தமா, வீடு வந்து சேர்ந்தமான்னு இல்லாம, இந்த, "டார்ச்சரை' அனுபவிக்க வேண்டி இருக்கே'ன்னு, ஊழியர்கள் புலம்புறாங்க... வட மாநில அதிகாரிகளின் குடும்பத்தினர் தான் ரொம்ப, "இம்சை' பண்றாங்க பா...'' எனக் கூறி, நடையைக் கட்டினார் அன்வர்பாய்.மற்றவர்களும் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது!
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos