கொல்கத்தா:
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் 6வது தொடரில் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு அணியில் பல்வேறு நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடி வருகின்றன.
தற்போது 6-வது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.முதல் போட்டி நாளை தொடங்குகிறது. மே 26-ந்தேதி வரை 54 நாட்கள் ஐபிஎல் திருவிழா நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் கடந்த முறையை போலவே 9 அணிகள் பங்கேற்கின்றன.
டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்குப் பதிலாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011 சாம்பியன்). கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012 சாம்பியன்), மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008 சாம்பியன்), சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் ஆகிய 9 அணிகள் களம் இறங்குகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர்) மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கு 16 ஆட்டம் இருக்கும். `லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் `பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஜெயவர்த்தனே தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் தசை பிடிப்பால் அவதிப்படுகிறார். நாளைய தொடக்க ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகமே. ஐ.பி.எல். போட்டித்தொடரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் (158) எடுத்த வீரர் ஆவார்.
அந்த அணியில் கேப்டன் காம்பீர், யூசுப் பதான், மார்கன், மனோஜ் திவாரி, காலிஸ், மனவீந்தர் பிஸ்லா, சுனீல் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். டெல்லி அணியில் காயம் காரணமாக பீட்டர்சன் (இங்கிலாந்து), ரைடர் (நியூசிலாந்து) ஆகியோர் ஆடமாட்டார்கள்.
ஜெயவர்த்தனே, ஷேவாக், வார்னர், மார்னே மார்கல், குலாம்போடி, ஜான் போத்தா, இர்பான் பதான், உமேஷ் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் டெல்லி அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் ஐ.பி.எல். போட்டியில் 11-வது முறையாக மோதுகின்றன. இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் கொல்கத்தா 5 முறையும், டெல்லி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.





Post a Comment