சென்னை ஏர்போர்ட்டில் வாயைத் திறக்க மறுத்த 2 பேர், வலுக்கட்டாயமாக திறந்தபோது விழுந்த ரூ.13.5 லட்சம்



சென்னை: 

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வாயில் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. 

அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு 2 பயணிகள் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த 2 பேரையும் அழைத்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை கேட்டதுடன் சில கேள்விகளும் கேட்டனர். 

அதற்கு அந்த 2 பேரும் எந்த பதிலும் அளிக்காமல் ஒரு துண்டு சீட்டில் நாங்கள் இன்று மவுன விரதம் என்று எழுதி காட்டினர். இதையடுத்து போலீசார் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வாயைத் திறந்தனர்.

 அப்போது ஒருவரின் வாயில் இருந்து 225 கிராம் தங்க பிஸ்கட்டும் மற்றொருவரின் வாயில் இருந்து 200 கிராம் தங்க பிஸ்கட்டும் வந்து விழுந்தன. அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம் ஆகும். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

விசாரணையில் அவர்கள் கண்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(53) மற்றும் முகமது இஷாத்(47) என்பது தெரிய வந்தது. அவர்கள் யாருக்காக தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தனர் என்பது குறித்து விசராணை நடந்து வருகிறது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos