முருங்கைக்கீரை அடை--அடை வகைகள்.



துவரம் பருப்பு,
கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு,
பயத்தம் பருப்பு - தலா அரை கப்,
பச்சரிசி - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 4,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை - 1 கப்,
துருவிய தேங்காய் (விருப்பப்
பட்டால்) - சிறிது.

அரிசி, பருப்பு வகையறாக்களை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.

 இதை சில மணி நேரம் பொங்க விடவும். பிறகு தோசைக்கல் காய்ந்ததும், தோசை போல வார்த்து, மேலே முருங்கைக் கீரையைத் தூவி, இரண்டு பக்கங்களும் திருப்பிப் போட்டு நன்கு வேக விட்டுப் பொன்னிறமானதும் பரிமாறவும்.

முருங்கைக்கீரையை வதக்கிச் சேர்க்கத் தேவையில்லை. இன்ஃபெக்ஷன் வராமலிருக்க முருங்கைக்கீரை அடை சாப்பிடலாம்
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos