ஆமதாபாத், மார்ச் 9-
குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வித்தல் ரடடியா நேற்று நரேந்திரமோடி முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
இந்த விழாவில் முதல்- மந்திரி நரேந்திரமோடி பேசுகையில் கூறியதாவது:-
பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பேசியதை கவனித்தேன். அப்போது எனக்கு காலி குடம்தான் அதிக சத்தம் போடும் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.
மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோல்வியை மறைக்கவே அவர் சத்தம் போடுகிறார்.
அவர் கூறும் கருத்துக்களால் நமதுநாடு நிச்சயம் மேம்பாடு அடையாது.
பிரதமர் மன்மோகன்சிங் ஆவேசம் அடைவதை விட்டு, விட்டு இந்த நாட்டை முன்னேற்றும் வகையில் அர்த் தமுள்ள பேச்சை பேச வேண்டும். அவரது பேச்சுக்களில் மேம்பாட்டு திட்டங்களோ, எதிர்கால சிந்தனைகளோ இல்லை.
மன்மோகன்சிங் எங்களுக்கு கொடுக்கும் பதில்கள் 24 மணி நேரத்தில் செத்து விடுகின்றன. ஆனால் அவருக்கு சுஷ்மாசுவராஜ் கொடுக்கும் பதிலடிகள் அருமையாக உள்ளன.
இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.





Post a Comment