மோடி புண்ணியத்தால் சர்ச்சைக்குரிய அமீத் ஷாவுக்கும் பாஜகவில் உயர்பதவி!



டெல்லி: 

போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கிய மோடி ஆதரவாளரும், முன்னாள் குஜராத் அமைச்சருமான அமீத் ஷாவுக்கும் பாஜகவில் உயர்பதவி கிடைத்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. 

குஜராத் மாநில அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. தீவிர மோடி ஆதரவாளர். சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்டர் வழக்கிலும், அவரது மனைவி கெளசர் பீயின் கொலை வழக்கிலும் சிக்கியவர் இவர்.

 இந்த வழக்கில் இவரை சிபிஐ கைதும் செய்தது. பின்னர் குஜராத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்த நிலையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அமீத் ஷாவுக்கு பாஜகவில் பதவி வாங்கிக் கொடுத்துள்ளார் மோடி.

 அதாவது பொதுச் செயலாளர் பதவி அமீத் ஷாவுக்குக் கிடைத்துள்ளது. அமீத் ஷா மீது ஏற்கனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் எப்படி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos