காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா... சித்தார்த் மவுனம்!



சமந்தாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் சித்தார்த் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை இருவருமே மறுக்கவில்லை. 

சமந்தாவும் சித்தார்த்தும்தான் இப்போது தெலுங்கில் பரபரப்பாக பேசப்படும் ஜோடி. கடந்த சனிக்கிழமையன்று இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குப் போய் சாமிகும்பிட்டனர். 

புதுமண ஜோடி போல பெற்றோருடன் அவர்கள் சென்ற விதம், புதிதாக திருமணமாணவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜையை அவர்களும் நடத்தி சாமி கும்பிட்டது போன்றவற்றை வைத்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் கிளம்பின. 

ஆனால் இவற்றை சித்தார்த் மறுக்கவில்லை. ஆனால் அவருக்கு வேறு ஒரு செய்தி கோபத்தைக் கிளப்பிவிட்டதாம். சித்தார்த்தின் தந்தை திடீரென மயங்கிவிழுந்தார் என்பதுதான் அந்த செய்தி.

 இதனை மறுத்துள்ள சித்தார்த், தந்தை நலமாக இருப்பதாகவும், யாரோ வேலையற்றவர்கள் கொளுத்திப் போட்டுவிட்டதாகவும் கொதித்துள்ளார். ஆனால் சமந்தாவுடனான ரகசிய திருமணம் குறித்த செய்திக்கு மட்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos