பரதேசியில் பவரு ஏன் நடிக்கலை தெரியுமா?



நேற்று ரிலீசாகி, இன்று கலவையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பரதேசியில் ஒரு பாத்திரத்தில் நடிக்க பவர் ஸ்டாரை இயக்குநர் பாலா கூப்பிட்டிருந்ததை ஏற்கெனவே எழுதியிருந்தோம்.

 ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் வரை போன பவரை பியூஸ் பிடுங்கி அனுப்பிவிட்டார் பாலா என்ற உண்மை தெரியுமா? பரதேசியில் கிறிஸ்துவ டாக்டராக வருகிறாரே சிவசங்கர் மாஸ்டர்... அந்த ரோலுக்கு முதலில் அழைக்கப்பட்டவர் பவர் ஸ்டார்தானாம்.

 அலுவலகத்துக்கு வரவழைத்து, ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓகே செய்த பாலா, குறிப்பிட்ட தேதியில் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். அதற்குள் தன்னால் முடிந்த அளவு பப்ளிசிட்டியை செய்துவிட்ட பவர், சொன்ன தேதியில் ஸ்பாட்டுக்குப் போயிருக்கிறார். 

எப்படி தெரியுமா... பாலா சொன்ன நேரத்துக்குப் போகாமல், 3 மணி நேரம் தாமதமாக, தனது படை பரிவாரங்களுடன் போயிருக்கிறார். 

அங்கு இவரது கைத்தடிகள் செய்த அலம்பல், பவர் பார்க்கும்போதெல்லாம் கைத்தட்டி விசிலடிக்க.. கடுப்பான பாலா தனது ரியலிட்டி டீஸரில் காட்டிய கோபத்தை நிஜமாகவே காட்ட, தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள். 

இன்னும் ஏன்யா நிக்கிறே கிளம்பு கிளம்பு...என்று சவுண்ட் விட, சப்த நாடியும் அடங்கிப் போய் கிளம்பினாராம் பவரு!
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos