போர்ப்ஸ் பட்டியலில் அஜீத்தை முந்திய விஜய்.

சென்னை: போர்ப்ஸ பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61 மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஷாருக்கின் பரம எதிரி சல்மான் கான்.
போர்ப்ஸ் பட்டியலில் நம்ம கோலிவுட் பிரபலங்களும் உள்ளனர்

விஜய்க்கு 28வது இடம்
‘இளைய தளபதி’ விஜய் போர்ப்ஸ் இந்திய பிரபலகள் பட்டியலில் 28வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ. 38.46 கோடி சம்பாதித்துள்ளார்.

43வது இடத்தில் சூர்யா
படங்கள் தவிர்த்து விளம்பரப் படங்களில் அதிகம் சம்பாதிக்கும் சூர்யாவுக்கு போர்ப்ஸ் பட்டியலில் 43வது இடம் கிடைத்துள்ளது
 
61வது இடத்தில் ‘தல’
8 மாதத்திற்கு ஒரு படம் என்று கணக்கு வைத்து நடித்து வரும் அஜீத் குமாருக்கு இந்திய பிரபலங்கள் பட்டியலில் 61வது இடம் கிடைத்துள்ளது.

விக்ரமுக்கு 67வது இடம்
படத்துக்கு ஏற்றவாறு தன்னையே மாற்றிக் கொள்ளும் விக்ரம் போர்ப்ஸ் பட்டியலில் 67வது இடத்தில் உள்ளார்.
 

Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos