சென்னை: அஜீத் குமார் பிரியாணியில் இருந்து பொங்கலுக்கு தாவிவிட்டாராம். அஜீத் குமார் சூப்பரா பிரியாணி செய்வார் என்று நாங்கள் சொல்லவில்லை அவருடன் நடித்து வருபவர்கள் சொல்கிறார்கள்.
விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங்கில் அஜீத் தன் கையாலேயே பிரியாணி செய்து அதை படக்குழுவினருக்கு பரிமாறினார் என்று நாம் செய்தி வெளியிட்டோம்.
அவர் சமைக்கும் பிரியாணியை சாப்பிட முடியலையே என்று சில நடிகைகள் வருத்தம் தெரிவித்ததும் உண்டு. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் அஜீத் பிரியாணி சமைக்கவில்லை.
மாறாக பொங்கல் சமைத்து அனைவருக்கும் பரிமாறுகிறாராம். என்ன அஜீத் திடீர் என்று பொங்கல் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்கள்
Post a Comment