ஒரு கேடுகெட்ட அரசியல்வாதிக்கு தன் மகனே ஆப்பு வைக்கும் அதிரடிப் படம் தான் அமைதிப்படை. நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. (அமைதிப்படை-2) படத்திலும் அதே கதையமைப்பு தான். அரசியலைப்பற்றி அதேவிதமான சரவெடி வசனங்களை அள்ளிவீசி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன்.
வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆப்பு வைப்பது, என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது.
ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைதிப்படை படத்தில் வந்த நாகராஜசோழன் கேரக்டர் இதிலும் தொடர்கிறது.
சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். பிறகு... வழக்கமான அலப்பறைகள் தொடர்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். அதில் ஒரு பெரிய அமௌண்டை கொள்ளையடிக்கலாம் என்பது அவரின் கணக்கு. ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது.
இதற்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக் வைக்கிறார் நாகராஜசோழன். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது.
ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு சூன்யம் வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே... அதே எனர்ஜி - அதே டைமிங்! பிண்ணிட்டாங்களே...!
சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல். சி.எம் முதல் பி.எம் வரை ஒருத்தர கூட விட்டுவைக்காம, சும்மா... கலாய்ச்சுட்டாங்களே!
Post a Comment