ஹரி இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் ஹன்சிகாவுடன் சூர்யா நடித்த சிங்கம் 2 படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு துருவ நட்சத்திரம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பட பூஜை வட பழனியில் நடந்தது. இதில் சூர்யா, கவுதம்மேனன், பார்த்திபன், ராம், பிரேம்ஜி பங்கேற்றனர்.
இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் துருவ் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் கவுதம்மேனன்.
கதைக்கு பொருத்தமாக இருந்ததால் துருவ நட்சத்திரம் என்ற தலைப்பு வைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன், சிம்ரனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.
புதுமுக நடிகையை கவுதம் மேனன் தேடிவருகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
Post a Comment