பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மீண்டும் போலீஸ் காவல்



‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் அம்பலமானது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஆகியோரிடம் இவர் கோடிக்கணக்கான ரூபாயை அபேஸ் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சீனிவாசனை போலீசார் ஏற்கனவே ஒருமுறை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விசாரணை முடிந்த பின்னர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos