ஹன்சிகாவின் 22 குழந்தைகள்



சினிமாவுக்கு வெளியிலும் நல்ல பெயர், இமேஜோடு உள்ள நடிகைகள் மிக அரிதாகத்தான் வாய்க்கிறார்கள். ஹன்சிகா அப்படி ஒரு அரிதான நடிகையாகத்தான் இருக்கிறார்.

தன் சம்பாத்தியத்தில் 22 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறார். அவர்களுக்குத் தேவையான அத்தனைப் பொருள்கள், படிப்புக்கான செலவுகள் என எல்லாவற்றையுமே ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், "என் அம்மா ஒரு டாக்டர். ஃபீஸ் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவச ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. சின்ன வயசுல இருந்தே ஆசிரமங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் அம்மா என்னை அழைச்சிட்டுப் போவாங்க.

'மத்தவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணணும்'னு அவங்க சொல்லிச் சொல்லி வளர்த்ததுதான் என்னுடைய இந்த குணத்துக்கு காரணம். நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அம்மா மாதிரி என்னால முடிஞ்ச அளவுக்கு நிறையப் பேருக்கு உதவி பண்ணணும்னு நினைச்சேன்.

அதான் 22 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்கவைக்கிறேன். அந்த 22 குழந்தைகளுக்கும் ஸ்கூல் -டியூஷன் ஃபீஸ், யூனிஃபார்ம், விளையாட்டுப் பொருட்கள், தனித் திறமையை வளர்க்கும் பயிற்சிகள்னு எல்லாத்துக்கும் ஆகும் செலவுகளை நான் பார்த்துக்கிறேன்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் மும்பைக்குப் பறந்துபோய் அவங்களோடதான் நேரம் செலவழிப்பேன். என் மனத் திருப்திக்காக மட்டுமே இதைச் செய்றேன்.

இப்போ பிரஸ்ட் கேன்சரால் பாதிக் கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவையும் ஏத்துக்கிட்டேன். முதியோர்களுக்கான ஒரு ஹோம் கட்டத் திட்டமிருக்கு," என்றார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos