கமலுடன் நடிக்க மறுத்தது ஏன்? -ஸ்ருதிஹாசன்



கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் `7-ஆம் அறிவு' `3' படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் 2 படங்களில் நடக்கிறார். `விஸ்வரூபம் 2' படத்துக்கு பின் கமல் நடிக்க உள்ள புதிய படத்தில் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க முயற்சி நடந்தது.

இதற்காக ஸ்ருதிஹாசனை அணுகி கமல் கால் சீட் கேட்டார். ஆனால் அப்படத்தில் நடிக்க முடியாது என்று ஸ்ருதி மறுத்து விட்டார். இது குறித்து ஸ்ருதி கூறியதாவது:-

இந்தி தெலுங்கு படங்களில் பிசியாக நடிப்பதால் அப்பா படத்தில் நடிக்க முடிய வில்லை. இதற்காக அவர் வருத்தப்பட மாட்டார். மகள் பிசியாக இருக்கிறாளே என்று சந்தோஷப்படுவார்.

 கதைகளை நானே தேர்வு செய்கிறேன். எந்த படத்தில் நடிப்பது எதை நிராகரிப்பது என்பதெல்லாம் நான் எடுக்கும் முடிவுதான். இதில் தந்தையிடம் ஆலோசனை கேட்க மாட்டேன்.

கதை பற்றியும் விவாதிக்க மாட்டேன். அவரும் என் விஷயத்தில் தலையிடுவது இல்லை. அனுபவங்கள் மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். 

அனுபவ பாடம்தான் சிறந்தது என்று அவர் அடிக்கடி சொல்வார். எனவே என்ன பிரச்சினையானாலும் நானே அதற்கு தீர்வு காண முயற்சிக்கிறேன். மற்றவர்களிடம் கேட்பது இல்லை.

 ஆரம்ப காலங்களில் அப்பா படங்களில் வேலை பார்த்தேன். அப்போது நிறைய அனுபவங்கள் கிடைத்தது. அது இப்போது எனக்கு உதவுகிறது.

இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos