முன்னணி நடிகைகள் சம்பளம் வாங்காமல்கூட நடிப்பார்கள். ஆனால் புதுமுகம் என்றால் புறமுதுகுதான். சிக்கவே மாட்டார்கள்.
ஆச்சரியமாக ஹன்சிகா மோத்வானி புதுமுக நடிகர் சித்தார்த்துடன் – இவர் பாய்ஸ் சித்தார்த் கிடையாது – நடிக்கிறார், அதுவும் முழுமனதுடன், எக்ஸ்ட்ரா சம்பளம் வாங்காமல். எப்படி இந்த அதிசயம் நடந்தது?
ஹன்சிகாவின் அம்மா சினிமாவின் தீவிர விசிறியாக இருந்த போது கனவுக்கன்னியாக கொடிகட்டிப் பறந்தவர் ஜெயப்பிரதா. இவர் தனது மகனை தெலுங்கு மற்றும் தமிழில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். மகனின் பெயர் சித்தார்த்த். தமிழில் படத்தின் பெயர் வாலிபன்.
என் மகனுடன் உங்கள் மகள் நடிக்க சம்மதமா என்று ஹன்சிகாவின் தாயாரிடம் கேட்டிருக்கிறார் ஜெயப்பிரதா. அதற்கு ஹன்சிகாவின் தயார் என்ன பதிலளித்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறோம். இப்போது ஹன்சிகா சித்தார்த்தின் ஜோடி.
சினிமாக்காரர்களுக்கும் சினிமா மோகம் எக்கச்சக்கமாக உள்ளது என்பதற்கு இது சின்ன உதாரணம்.




Post a Comment