அமெரிக்காவில் முதல்முறை 5.5 கோடியை தாண்டிய விஸ்வரூபம்..

யுஎஸ் ஸில் கமலின் விஸ்வரூபம் 5.5 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. கமலின் திரைப்படம் ஒன்று இவ்வளவு அதிக வசூலை யுஎஸ் ஸில் பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
யுகே யில் இப்படம் நான்காவது வார இறுதியில் 11 திரையிடல்களில் 11,370 பவுண்ட்களை வசூலித்தது. இதுவரையான இதன் யுகே வசூல் 2,96,417 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 2.49 கோடிகள்.
யுஎஸ் ஸில் இப்படம் அதே நான்காவது வார இறுதியில் 11 திரையிடல்களில் 21,189 டாலர்களை வசூலித்தது. இதுவரையான யுஎஸ் வசூல் 1,026,384 அமெரிக்க டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 5.57 கோடிகள்.
இந்த இரு நாடுகளிலும் கமலின் படம் ஒன்று இவ்வளவு அதிக வசூலை பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos