விஜய்க்கு துப்பாக்கி என்ற ஹிட் அடித்த படத்துக்குப் பிறகு வரவுள்ளதால், ‘தலைவா’ பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. படத்தில் அரசியல் “வரும்.. ஆனா வராது” என்ற மாயமான் காட்டும் விதத்தில் ‘தலைவா’ டைட்டில் இருந்தாலும் (அரசியல் இல்லை என சூடம் அடிக்கிறார் டைரக்டர்) படம் ஹீரோயிசம் காட்டும் படம்.
படத்துக்கு இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் தனி ட்ராக்கில் ஓடுகிறார்.
“படத்தின் பாடல்கள் சொல்லி ஹிட் அடிக்கும் பாஸ்… இருந்து பாருங்க” என்று சொல்லும் ஜி.வி.பிரகாஷ் குமார், ஏற்கனவே 3 பாடல்களை போட்டு கொடுத்துவிட்டு, 4-வது பாடல் உருவாக்கத்தில் இப்போது பிசி. முதல் 3 பாடல்களும் சூப்பரா வந்திருக்கு என்றார்.
படத்தில் மொத்தம், 5 முழு பாடல்களாம். இந்த 5 பாடல்களில் 2 பாடல்கள், தீம் சாங்ஸ் என்கிறார் இவர்.
“வழக்கமாக விஜயக்கு ஒரு ஓப்பினிங் சாங் இருக்கும். இந்தப் படத்தில், அதையும் தீம் சாங் என்று எடுத்துக் கொள்ளலாம். மற்றையது, ‘தலைவா’ என்ற டைட்டிலை பூஸ்ட் பண்ணும் விதமான சாங், அதுதான், பவர்-ஃபுல் தீம்சாங்” என்றும் சொல்கிறார்.
தலைவா டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார். இளைய தளபதி விஜய் படத்துக்கு கமிட் ஆனபோது, தனது ஆஸ்தான இசையமைப்பாளரையும் கையோடு அழைத்து வந்திருக்கிறார். அந்த பெயரை கெடுக்ககூடாது என்பதில், பிரகாஷ் உஷார்.
தவிர, ஜி.வி.பிரகாஷ் குமார், இளைய தளபதி விஜய் படத்துக்கு இசையமைப்பது இது முதல் தடவை. எனவே, டபுள் உஷார். “படத்தின் பாடல்கள் சொல்லி ஹிட் அடிக்கும் பாஸ்… இருந்து பாருங்க” என்பதை நம்பலாம்.





Post a Comment