பாலிவுட் போகும் அனுஷ்கா



அசின், த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா, ஸ்ரேயா என தமிழ் ஹீரோயின்கள் பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அனுஷ்கா, நயன்தாரா மட்டும் வாய்ப்புகள் வந்தும் பாலிவுட்டில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் ‘நான் ஈ’ பட இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ‘பாஹுபாலி’ படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் உருவாகிறது.

‘இந்தியில் நடிக்க அனுஷ்காவுக்கு விருப்பம் இல்லை. அவருக்கு பதிலாக சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளார்’ என தகவல் வெளியானது. இதை அனுஷ்கா மற்றும் தயாரிப்பாளர் தரப்பினர் மறுக்கின்றனர்.

‘முதல் முறையாக பாஹுபாலி படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் அனுஷ்கா. ஜூலை மாதம் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

இப்படத்தில் நடிப்பதற்காக பாரம்பரிய கத்தி சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார்’ என்கிறது தயாரிப்பு தரப்பு. இப்படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவை பரிசீலிக்கவில்லை என்றே இயக்குனர் ராஜமவுலி தரப்பிலும் கூறப்படுகிறது.

ஆக, இந்தியில் அனுஷ்கா நடிப்பது உறுதியாகிவிட்டது.
Share This Video :

Post a Comment

 
Copyright © 2013. FullTamilVideos - All Rights Reserved
Designed by FullTamilVideos